உலக நாடுகளில் உடற்கல்வி
31
கொள்ளப்படுகின்றார்கள். ஏதென்ஸ் சட்டமன்றத்தை எக்லேசியா (Ecelesia) என்று அழைத்தார்கள்.
சுதந்திரமான நடவடிக்கைகள் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு இளைஞனும், தொடர்ந்து செய்து வந்த ஜிம்னாஸ்டிகளில் பயிற்சிகளை விடாது பின்பற்றி வந்து, உடலைக் கட்டுக்கோப்போடு காத்து வந்தனர். அரசால் நடத்தப்பட்டு வந்த பொது பயிற்சிப் பள்ளிகளில், அவர்கள் சென்று உடற்பயிற்சிகளைத் தொடர்ந்தனர்.
அரசு நடத்திய முக்கியமான 3 பயிற்சிப் பள்ளிகள் லிசியம் (Lyceum); அக்காடமி (Academy); சினசார்கஸ் (Cynasargas) என்ற பெயருடன் அழைக்கப்பட்டன.
சமுதாயத்தில் நடைபெறுகிற மதசம்பந்தமான, விழாக்கள் போன்றவற்றில் நடனம் ஆடுவது போன்ற செயல்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டனர். அவர்கள் ஆடிய நடனங்களில், குறிப்பிடத்தக்கவை, டயோனிசியாக் என்ற குழு நடனம்; பிர்ரிக் என்ற போர் நடனம் இவை இரண்டும் மிகவும் கடினமான அதே சமயத்தில் நுணுக்கமான நடனங்களாகும்.
ஏதென்சில் பெண்கள் நிலை:
ஏதென்ஸ் நாட்டில் பெண்கள், பாதுகாக்கப்பட்ட நிலையில்தான் வாழ்க்கை நடத்தினர். அவர்கள் கல்வி கற்றிட பொதுப் பள்ளிகளுக்கு அனுப்பப்படவில்லை. அவர்கள் கற்ற கல்வியெல்லாம், வீட்டிலே தான் அமைந்திருந்தது.
ஒரு குடும்பப் பெண்ணுக்குரிய கலைகளும் கல்வியும் தான் எல்லா பெண்களுக்கும் கற்பிக்கப்பட்டது. உடற்பயிற்சிகளுக்கும், ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளுக்கும் அவர்கள் வாய்ப்பு பெறுவது போல, எந்தவிதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்படவில்லை.