உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

33


இப்போட்டிகளில், ஓட்டப் போட்டிகள், கனமான எடை எறியும் போட்டிகள், தாண்டும் போட்டிகள், குத்துச் சண்டை,தேரோட்டப் போட்டிகள், மல்யுத்தப் போட்டிகள் முக்கியமானவைகளாகும்.

இவற்றில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசாக, ஆலிவ் மலர் வளையம் சூட்டப்பட்டது. இது கிரேக்கர்களிடையே மிகவும் பெருமை தரும், கெளரவம் மிகுந்த பரிசாகக் கருதப்பட்டது.

இப்போட்டியைப் பற்றிய குறிப்பு கி.மு. 776ம் ஆண்டிலிருந்து தான் கிடைக்கிறது. தொடர்ந்து 11 நூற்றாண்டுகள் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள், கி.மு. 394ம் ஆண்டு ரோமானிய சக்கரவர்த்தி முதலாம் தியோடசிஸ் என்பவரால் தடை செய்து நிறுத்தப்பட்டு விட்டது.

2. பிதியன் விளையாட்டுக்கள்

ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு, அடுத்து பெருமை உடைய போட்டியாக பிதியன் போட்டிகள் அமைந்திருந்தன.

நான்கு ஆண்டுகளுக்குன் ஒருமுறை,அப்பலோ(Apolo)தெய்வத்தைப் பெருமைபடுத்துவதற்காக, நிகழ்த்தப்பட்டப் போட்டியாகும். இது, ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டிலிருந்து வருகிற 3வது ஆண்டில் டெல்பி என்ற இடத்தில் நடத்தப்பட்டதாகும்.

இந்தப் போட்டிகளில், இசைப் போட்டியே பிரதான இடத்தை வகித்திருந்தது. பின்னர், விளையாட்டுப் போட்டிகளான தேரோட்டப் போட்டிகள், குதிரை ஏற்றப் போட்டிகள் போன்றவை இதில் இணைக்கப்பட்டபோதிலும், இசையே மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது.

இந்தப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பே மலர் வளையம் (Bay leaves) சூட்டப்பட்டது.