உலக நாடுகளில் உடற்கல்வி
37
செய்திகளை நன்றாகப் புரிந்துகொண்டு தெளிதல் (Emulation);
தெரிந்துதெளிந்தவற்றில், ஆர்வமுடன்பங்குபெறுதல், (Participation)புகழ்பெருதல்,
ஏதென்ஸ் மக்கள் தங்கள் முன்னோர்களைப்பின்பற்றி அவர்களைப் போலவே, வீரமான விவேகம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்காக முயன்றார்கள். இந்தக் கருத்தையே கல்வியாளர்களும் ஊக்குவித்தார்கள் உற்சாகம் ஊட்டி பயிற்சியளித்தார்கள்.
விதிகளுக்கு அடங்கி நடக்கக் கற்பித்தார்கள். விதிகளைப் பின்பற்றுவது எல்லாருக்கும் கடமையாக இருந்தது. விதிகளை மீறியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
பரிசு, புகழ், பெருமை, உரிமை வெற்றி வீரர்களுக்குக் கிடைத்தன. அதுவே அனைவருக்கும் தேவையானதாக இருந்தது. அதற்காகவே அவர்கள் உழைத்தனர் பிழைத்தனர்.
4. கிரேக்கர்களின் பொற்காலம் (Golden Period)
இந்தக் காலக் கட்டத்தில், பொதுவான முன்னேற்றமான எண்ணம் என்பது மாறி, தனிப்பட்டவரின் தனித்தன்மை, முக்கியத்துவம் (Individualism) அடைந்தது. தனிப்பட்டவரின் ஆலுமை பெரிதும் புகழப்பெற்றன.
எல்லாவற்றிலும் மனிதனே ஓர் அளவு கருவியாக அமைந்திருக்கிறான். ஆகவே மனிதனைத் திருப்திப்படுத்து என்னும் கோஷம் தான் கொள்கையாக மாறியிருந்தது.