உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

 வருகின்றன என்கிற கருத்தைத்தான், உலக வரலாறு நமக்கு நல்கியிருக்கின்ற நல்லதோர் அறிவுரையாகும்.

உடற்கல்வியை வளர்த்து வளர்ந்த நாடுகளின் மேன்மை; உடற்கல்வியை ஒதுக்கி, வெறுத்து வைத்த நாடுகள் வீழ்ந்துபட்ட கீழ்மை; அடிமையாகிப்போன அவலம்; அந்நியர் ஆட்சிகளில் பெற்ற துயரம் போன்ற உண்மைகளை இந்நூலில் நாம் பார்க்கிறோம்.

உடற்கல்விக்கு இப்படி ஓர் ஆற்றல் இருக்கிறதா என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் என்பது, எனக்குப் புரிகிறது.

அடிமை நாடுகள் ஆண்மை பெற்றதும், அடலேறுகளாக ஆதிக்கக்காரர்களைச் சாடியதும், சுதந்திரம் அடைந்து சுகம் பெற்றதும், படிக்கும் இந்த சரித்திரத்தில் சுவையான காட்சிகளாகும்.

இப்படித்தான் உலக நாடுகளில் உடற்கல்வி உலா வந்திருக்கிறது.

அனைத்து மக்களுக்கும் அமைதி நிலாவாக; ஆற்றல் மிகு பரிதியாக, விடியலைக்காட்டும் வெள்ளி மீனாக; வருத்தமுற்று நடப்போர்க்கு வழிகாட்டும் துருவ நட்சத்திரமாக; கேட்பதையெல்லாம் கொடுக்கின்ற காமதேனுவாக, கற்பகத்தருவாக உடற்கல்வி உதவியிருக்கிறது. உயர்த்தியிருக்கிறது. உலகை நடத்தியிருக்கிறது.

இத்தகைய இனிய கருத்துக்கள் நிரம்பிய புத்தகத்தை எழிலாக உருவாக்கிக் தந்திருக்கின்றார்கள் கிரேஸ் பிரிண்டர்ஸ் அச்சகத்தார். அதற்குப்பெரிதும்பொறுப்பேற்று சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார் ஆடம் சாக்ரட்டீஸ். என் நன்றியுடன், இனிய பாராட்டுக்கள்.

என் இலட்சிய வாழ்வின் வெளிப்பாடாக வெளிவரும் உலக நாடுகளில் உடற்கல்வி நூலை உங்கள் கரங்களில் ஒப்படைக்கிறேன். ஒரு தீபம் பல தீபங்களை ஏற்றி ஒளி தரும் என்ற நம்பிக்கையுடன் படித்துப் பயன்பெறுக... வாழ்வின் பேறெல்லாம் பெறுக. என் நூல்களை ஆதரித்து வரும் தமிழக மக்களுக்கு என் அன்பார்ந்த நன்றி.

அன்புடன்
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


  • முதல் பதிப்பின்போது நூலாசிரியர் எழுதிய முன்னுரை