6
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
நாடும் மக்களும்
கிரேக்க நாட்டின் அமைப்பு ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் அமைந்திருந்தது. கிரேக்க நாட்டில் பல சிறு சிறு குறு நாடுகள் (States) அடங்கியிருந்தன. ஆனால், அவை அத்தனையும் தனித்தன்மை உடையனவாகவும், சுதந்திரமான போக்குள்ளவைகளாகவும் உரிமை பெற்று விளங்கின. அவற்றை நகர நாடுகள் (City States) என்றும் அவர்கள் அழைத்தார்கள்.
சிறு சிறு நாடுகள் அமைப்பில் குறுகிய எல்லைகளுடன் இருந்தது போல, அவர்கள் செயலும் சிறுபிள்ளைத் தனமாகவே குறுகிய நோக்குடனே இருந்தன. அதாவது ஒருவருக்கொருவர் ஒற்றுமை உணர்வே இல்லாமல், வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் மற்றவர்களை வீழ்த்து வதிலேயே கண்ணுங் கருத்துமாக வாழ்ந்தனர். அந்த லட்சியத்தை வீர வாழ்வு என்றும் அழைத்தனர்.
எத்தனையோ சிறு நாடுகள் எண்ணிக்கையில் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் அதிகப் புகழும், ஆன்ற வல்லமையும் உடைய நகர நாடுகள் இருபது என்று கணக்கிட்டிருந்தனர்.
இந்த இருபது நகர நாடுகளில் இணையற்ற புகழும், வீறு பெற்ற சரித்திரமும் படைத்த நாடுகளாக மூன்றைக் குறிப்பிடலாம்.
- 1. ஏதென்ஸ் (இது முழுக்க முழுக்க ஒரு குடியரசு நாடு.)
- 2. ஸ்பார்ட்டா (ராணுவத் தன்மை மிகுந்த நாடு.)
- 3. கிரிட்டா (இரண்டுக்கும் இடைப்பட்ட கொள்கை உடைய நாடு.)
இம் மூன்றிலும் ஏதென்சும் ஸ்பார்ட்டாவும் தான் எல்லாவற்றிலும் முன்னணியில் நின்றன. அரசியல், சமுதாய