8
8 -: தீயைக் கடக்க முடியவில்லை. தூரத் தில் நின்றபடியே கை நீட்டுகிறான். கூண்டு தானாக வருகிறது, பறவையை அவன் எடுத்து க்கொள்ள வசதி செய்து !
இதைப் பார் க்கு ம் போது, இப்படி கை நீட்டி, கூண்டை வரச்செய்யும் சக்தி பெற்றவன் ஏன் கடல் கடந்து வரவேண்டும்? இருந்த இடத்திலிருந்தே மந்திரத் தால் வரவழைத்து விடலாமே என்ற இயல்பான ஐயம் எழுகிறது. எடுத்துவிடும்படி அமைக்கலாம் தான் ! அப்படிச் செய்து விட்டால், படப் பிரம்மாக்கள் தங்கள் (டெக்னிக்கு ளையும் டிரிக்குகளையும்) கலை உத்தி களையும் தந்திர வித்தை
களையும் திணிக்க முடியாமல் போய்விடுமே ! அதற்காக, மடத்தனமான கற்பனைகள் வளர்க்கப்படு கின்றன
சினிமாவிலே கதையைப் பற்றியோ, கதை நடந்த
காலத்தைப் பற்றியோ, கலையைப் பற்றியோ படத் தயாரிப் பவர்களுக்குக் கவலையில்லை. தங்களுக்குத் தெரிந்ததை யெல்லாம், தங்கள் கையில் அகப்பட்டவற்றை - தாங்கள் நல்லது என மதிப்பவற்றை - படத்திலே புகுத்திவிட வேண்டும் என்கிற தவிப்பு பல விபரீதங்களுக்கு இடமளிக்கிறது அர்த்தம் இருந்தாலும் சரி, அனர்த்தம் விளைவித்தாலும் சரி- அதனால் என்ன நினைத்ததைப் படத்தில் புகுத்திவிட வேண்டும். அதுதான் முக்கியம் ! இத்தகைய விபரீத ஆசைகளின் விளைவுகள்தான் புராணப் படங்களிலே நவநாகரிக மங்கையரின் நிர்வாண நாட்டியங்கள் இந்த நாட்டியங்களைப் புகுத்த கதை நெளிந்து கொடுத்தாகவேண்டும் ஆங்கிலோ இந்தியப் நாட்டியத்தைத் திணிப்பதற்காக சகுந்தலை "