16
ஆகவே சுலப மாக எ த்திப் பிழைக்க எத்தனை குறுக்குப்பாதைகள் உண்டோ
அத்தனையும் கையாள்வதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறார்கள். மெளஸ் பெற்று விட்ட கதைகளையும், படம் பார்ப்பவர்களின் அபிமானத்தைப்
பெற்று விடும் பிரபல நடிகர்களையும் போட்டுப் படம் பிடிக்கத்
துடிப்புடன், அவ்வப்போது மக்களின் மதிப்பை பெற்ற விடுகிற வேறு விஷயங்களையும் அர்த்தமில்லாமலே- திணித்து விடத் தயங்குவதில்லை. இதனால் காந்தி பொம்மைகளும் மூவர்ணக் கொடி களும் பாரதி பாட்டுகளும் இன்னும் பல எத்து வேலைகளும் தாராள இடம் பெற்று விடுகின்றன படங்களில், 6 சினிமாத் தொழில் ஏன் இந்தச் சீரழிந்த நிலேமையிலேயே இருக்கிறது? இதன் காரணம் இத்துறையில் ஈடு பட்டிருப்பவர்களே. சினிமா சிறந்த கலை. பலவித சக்திகள், திறமைகளின் கூட்டு மலர்ச்சி. நேர்மையான முறையிலே பயன்படுத்தினால் நல்ல பலன் கிட்டும். அதற்கு உயர்ந்த நோக்கமுள்ளவர்கள்
படத்தொழிலை கைக்கொள்ள வேண்டும்.இன்றுள்ளவர்களில் பெரும்பாலோர்
வியாபாரமாக்கி விட்டதால்- லாபம் தரும்தொழி லாகக் கருதுவதால்- கலை வளர வகை செய்யவில்லை, கலை
யைக் காப்பாற்றி வெற்றிகரமான தொழிலாக அதை
வளர்க்க விரும்பாமல் எத்து வேலைகள் செய்து சுலபமாக பிஸினஸ் ஆக்கி விடுகிறார்கள்.