7
7 புராணப் பித்தலாட்டங்களை யும், அத்தைப்பாட்டி அளப்புகளையும் படம் பிடிக்க முனைகிறார்கள்-தொலைந்து போகட்டும் செய்வதை உருப்படியாகச் செய்கிறார்களா என்று பார்த்தால், அபத்தக் களஞ்சியமாகவும், பேத்தல் படங்களாகவுமே உள்ளன. இப்படித்தான் உருவாகின்றன வெற்றி தரும் படங் கள் என்று பீத்தல் பெருமைக்கு அடிப்படையாக உள்ள கன்னிகா வையோ, அபார வெற்றி என்று பிரமாகப் படுத்தப்படுகிற : ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி யையோ, அல்லது வேறு எந்தக் கத்திரிப் பட த்தையோ பார்த்தால், தானாகவே தெரியும் சினிமா பிரம்மாக்களின் பேதமையும் பித்தலாட்டங்களும். பரமசிவன் தோன்றி கை நீட்டுவார். மண்ணிலிருந்து குபுக்கெனக் கி ள ம் பு வான் ஒரு மகன் - முழுதும் வளர்ந்த ஆணழகன. திடீரெனக் கையை நீட்டுவார் சாமி. குடிசைகள், மாடுகள் பிறக்கும். வரம்பெற்ற ஆசாமி அந்தாத்திலே பறக்கவும், சித்து விளையாடல்கள் புரியவும் வல்லவனாக இருப்பான். ஆனால் சின்னஞ் சிறு காரியத்தைச் சாதிக்க முடியாமல் திண்டாடுவான் ! ஏன் ? படமுதலாளி, கதை எழுதுகிறவர், டைரக்டர்
முதலியவர்களது சிந்தனாசக்தி மழுங்கிவிட்டது தவிர வேறு எதுதான் காரணமாக இருக்க முடியும் ? ஒரு சிறு உதாரணம். கன்னிகா வில், பழிஞனின் உயிர்நிலை யான பறவையை எடுத்துவர பறவை வாகனத் தின் மீதேறி கடல் கடந்து போகிறான் கதாநாயகன். அங்கே பாதாள அறையில் பாதையூடே உள்ள பெருந்