உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


அந்த நிலை ஏற்படுவதற்கு வாசகர்களின் தரம் பெரும் அளவில் பார்த்தாக வேண்டும். அவர்களது ரசனையை ஈர்பான வழியில் திருப்புவதற்கு, தரம் அறிந்து படித்து மகிழம் ரசிகர்கள் உதவ வேண்டும்.

பல ஊர்காரில் சிறிய அளவில் இம்முயற்சி நடந்து கொட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்கு உரியது. வாசகர் வைட்டம், ரசிகர் மன்றம், இலக்கியக் கழகம் என்ற பெயர்களில், வாசகர்கள் அவ்வப்போது கூடி, விமர்சனம் செய்து, விவாதித்து, ரசனை உணர்வை வளர்க்கிறார்கள். கலை இலக்கியப் பெருமான், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகளும் நாடு நெடுகிலும், நல்ல இலக்கிய உணர்வை வளர்க்கவும், சிவ இலக்கியப் போக்குகளை சுட்டிக் காகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.

இம் முயற்சிகள் இன்னும் வலுப் பெற வேண்டும். வாசகர்களிடையே ரசனை உணர்வு நல்ல முறையில் வளர்வதற்கு, ஆரோக்கியமான விமர்சனங்கள் தேவை. 'சோலை இயக்கம்' முக்கியமான நகரங்களில் ஏற்பாடு செய்த 'எழுத்தாளர் உறவு'க் கூட்டங்கள் இவ் வகையில் நல்ல பணியாற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாசகர்களின் தரம் உயர்வதற்கும், எழுத்து - கலை - கலாச்சாரம் முதலியன நல்ல முறையில் வளர்வதற்கும், சிறு பத்திரிகைகள் எவ்வளவோ செய்ய முடியும். செய்ய வேண்டும்.