பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஒளிவளர் விளக்கு

போன்றது அன்று. நாம் உணரும் உணர்வுகள் இந்திரியங் களால் பெறுபவை. உலகத்துப் பொருள்கள் யாவும் ஐம் பொறிகளால் நுகரப்படுபவை. அந்த நுகர்ச்சி இருவகைப் படும். இன்பம் என்றும் துன்பம் என்றும் உள்ளவை அவை. அந்த நுகர்ச்சிகள் அழிந்து போகின் றவை. அவற்றிற்குரிய பொருள்களும், அவற்றை நுகரும் பொறி களும் சிலையில்லாதன. ஆதலின் அவற்ருல் அமையும் இன்ப துன்ப உணர்வுகளும் கிலேயின்றி அழிவன. இறைவனே உலப்பிலாத ஒன்று. அவனுல் வரும் நுகர்ச்சி அழியாதது; அழியும் இந்திரியங்களின் உணர்வுகளுக்கு அப்பாற் பட்டது.

இந்திரியங்களுக்கு விஷயமாகிற அத்தனையும் மாயா லோக ராஜ்யத்தில் உள்ளவை. அவற்ருல் உண்டாகும் சிற்றின்பம் உண்மையில் இன்பமே அன்று; துன்பத்துக்கு விதை. இறைவனே பேரின்பமயமானவன்; ஆனந்தமூர்த்தி. அவனை எல்லேக்குட்பட்ட இந்திரியங்களால் உணர ஒண்ணுது.

சுற்றும் கிடந்த பொருள்களே காம் இந்திரியங்களால் உணர்கிருேம், நுகர்கிருேம். அந்த நுகர்ச்சிக்கு அப்பாற் பட்ட அநுபவப் பொருளாக இருப்பவன் இறைவன். அந்த அநுபவத்தையே இன்பத்துக்கும் துன்பத்துக்கும் அப்பாற்பட்ட ஆனந்தம் என்று சொல்வார்கள். உணர்வு களின் சூழலேயெல்லாம் கடந்த உணர்வாக இறைவன் இருக்கிருன்.

உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே ! (சூழ் ಅಣ6ು. உணர்வு - நுகர்ச்சி,

இறைவனச் சச்சிதானந்த உருவன் என்று சொல் வார்கள். சத்து என்பது கித்தியமான தன்மை. அறிவான தன்மை சித்து. சுகதுக்கம் கடந்த இன்பமே ஆனந்தம்.