பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஒளிவளர் விளக்கு

உள்ளத்தில் எப்படி கினேக்கிருர்களோ அப்படித் தோற்றுகிறவன்.

தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !

(தெளி - தெளிவு. பளிங்கு கண்ணுடி. மணி - அழகு.)

அன்பர்களுக்கு உள்ளத்துள்ளே கின்று இனிக்கும் பெருமான் அவன் .

உலகியலிலே புகுந்து மயங்கி, மக்களையும் பண்டங்களை யும், விகழ்ந்ததையும் கிகழப் போவதையும் எண்ண எண்ண மனிதனுக்கு மனத்தில் ஆறுதல் உண்டாவதில்லே. முந்திரிப் பழத்தைத் தின்னும்போது ஒருவிதத் தித்திப்பு இருக் தாலும் பிறகு தொண்டையில் காறல் இருந்து கொண்டே இருக்கும். உலகத்துச் சிற்றின்பங்களால் படியும் வண்ட லாகிய எண்ணங்கள் சித்தத்திலே கிடந்து கசக்கும்; இறை வனே அந்தக் கசப்பைப் போக்கித் தித்திக்கிறவன்.

சித்தத்துள் தித்திக்கும் தேனே !

இறைவன் எல்லோருடைய உள்ளத்திலும் இருக் கிருன். ஆனல் அனேவருக்கும் அவன் புலப்படுவதில்லை. பெரிய வீடு கட்டிக் கம்பிகளும் விளக்குகளும் விசிறிகளும் போட்டாலும் பயன் இல்லை. பொத்தானே அமுக்கினல் விளக்கு எரியாது; விசிறி சுழலாது. மின்சார சக்தி வந்தா லன்றி, இணைப்புக் கொடுத்தாலொழிய, விளக்கு எரியாது. அப்படியே இறைவன் கம் உள்ளத்தில் இருந்தாலும் அவ ல்ை அடையும் ஆனந்தத்தை எல்லோரும் பெற இயலாது. உள்ளத்தில் அன்பு என்னும் மின்சாரத்தை இணேத்தால் ஆண்டவனுடைய அருளின்பத்தைப் பெறலாம். அன்பு