பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலம் உண்டவன் அழகு 37

ஒருவர், கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர்.

(கோலம் - உருவ அமைதி. அச்சோ : வியப்புக் குறிப்பு. குழைவர் - உருகுவார்.}

நீலமணி போன்ற கண்டத்தையும் பவளம் போன்ற திருவாயையும் முத்துப் போன்ற முறுவலையும் ஆனந்தம் பொழியும் திருமுகத்தையும் தம் கண்களால் கண்டு கண்டு அவற்றின் அழகை மொண்டு உண்டார். இத்தனே ئی۔y!AB கோடும் விளங்கும் இவரா ஆலம் உண்டார்? இதை நம்ப முடியவில்லையே! என்று ஒரு கணம் அவர் சிந்தனே ஓடியது. 'இல்லை, இல்லை. இவர் உண்டது ஆலந்தான் என்று மறுபடியும் பழங்கதையை கினேவுக்குக் கொண்டுவந்தார். 'ஆலம் இவரை என்ன செய்யும்? பிறர் உயிரைக் கொள் ளும் ஆலம் இவர் திருமிடற்றில் மணிபோல அணிபெற்றுத் திகழ்கிறது. ஆலத்தின் கொடுமையை மாற்றி அணியாக ஆக்கியது இவர் திருவருள்' என்று எண்ணி எண்ணி உருகினர்.

இந்தக் காட்சியும் கருத்தும் கருவூர்ச் சித்தருக்குத் திருக்களங்தை என்னும் தலத்தில் உள்ள ஆதித்தேச்சுரத் தில் கிடைத்தன. இப்படி அழகு பொலிய இருப்பவர் எங்கே இருக்கிருர் தெரியுமா? அவர் இடம் திருக் களங்தை ஆதித்தேச்சுரம் என்று அவர் பாடுகிரு.ர்.

நீலமே கண்டம், பவளமே திருவாய்;

நித்திலம் நிரைத்து இலங் கினவே

போலுமே முறுவல்; நிறைய ஆ னந்தம் பொழியுமே திருமுகம்; ஒருவர்

கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர்; உண்டது