பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஒளிவளர் விளக்கு

முகத்தைக் கோத்து வைத்தாற்போல் பற்கள் ஒளி வீசு கின்றன. -

நித்திலம் நிரைத்து இலங்கினவே போலுமே முறுவல், (கித்திலம் - முத்து. கிரைத்து - வரிசையாகக் கோத்து. இலங் கின - விளங்கின. முறுவல் - புன்னகை,)

ஒருகால் பல்லிலும் படாமல் விழுங்கிேைன? அதனல் உண்டாகும் வேதனையைச் சகித்துக்கொண்டிருக்கிருனே?" என்ற பைத்தியக்கார யோசனை தோன்றியது. அன்பு கிலேயில் சில சமயம் அறியாமையும் உண்டாகும். அவ லுடைய திருமுகமண்டலத்தைப் பார்த்தார். அது மகிழ்ச்சி யின் ஒளி படர்ந்து விளங்குகிறது. கண்டாருக்கு இன்பம் உண்டாகும்படி அதன் தேசு பொலிகிறது. நிறைய ஆனக் தத்தைப் பொழிந்து கொண்டிருக்கிறது.

நிறையஆ னந்தம் ப்ொழியுமே திருமுகம்.

'நஞ்சை இவ்ன் உண்டதிலே வேதனை இல்லை. அது இவனுக்குச் செயற்கரிய செயலும் அன்று. தன் குழந்தை களுக்காகத் தான் மருந்துண்ணும் தாய் போன்றவன் இவன். இந்தச் செயலால் இவனுடைய அழகு மிக்குக் தோன்றுகிறது. இவன் அகத்தின் அருள் முகத்தில் அழகுச் சுடர் வீசுகிறது. இப் பெருமானுடைய திருக் கோலம் எவ் வளவு அழகாக இருக்கிறது! இந்த அழகைக் கண்டு சொற் களால் வருணித்துச் சொல்வதென்பது நடக்கிற காரியமா? * அச்சோ என்ன அழகு!” என்று பிரமித்துப்போய்க் கண்ணே வாங்காமல் பார்த்துப் பார்த்து ஆனந்தம் அடைவ தன்றி வேறு என்ன செய்யமுடியும் ? எத்தகையவர்கள் கண்டாலும் இந்த அருளழகிலே ஈடுபட்டு உருகித்தான் போவார்கள். குழைந்து குழைந்து தம்மிடம் இருக்கும் கடுமை யெல்லாம் மாறி வியப்பேமயமாக ஆகிவிடுவார்கள்.