16
உண்டு, தேவை-என்று எண்ண மறந்துவிடுகிறார்கள்.
ஆகவே, பண்ணையார் மனைவி டிரைவரை அவன் ஆண். அவனுக்கு வயது இருபத்தைந்து அவளை விட மூத்தவன் என்றாலும்கூட-எப்படிக் கூப்பிட்டாலும், அலட்சியமாக மதித்தாலும் யாரும் குறை கூற முடியாது! அதில் அவளுக்கு ஒரு இன்பம்கூட இருந்தது.
‘இந்தா, இதை வாங்கிக்கோ’ என்றாள், மீண்டும் நீட்டினாள். ஏந்திய கைகளில் போட்டாளில்லை. போடுங்க அல்லது ‘கொடுங்கள்’ என்ற வார்த்தையை உதிர்க்கும் அவன் வாய் என எதிர்பார்த்தாள். ஏமாந்தாள்.
அவன் மெளனமாகத் தான் நின்றான். கைகளை நீட்டியபடி. அதிலே வைத்தாள் தனது கைகள் அவன் கைகளில் படும்படி கவனத்துடன்! வசியச் சிரிப்பும் காந்தப் பார்வையும் சிந்தினாள், அவனை இழுக்க எறிந்த தூண்டில் மாதிரி.
அதனால் அவன், அந்தஸ்தில் மேலான அவளை உணர்ச்சிகளில் கிழாக்கியே தீர்த்துப் பழிவாங்கி விடுவது என்று முடிவு கட்டி விட்டான்.
அவனுக்கு வெற்றிதான். அவளே இணங்கி வளைந்து வரும்போது அவனுக்கு சிரமமான காரியமா என்ன!
கிழட்டுக் கணவனால் மனோதிருப்தி பெறாத குமரி-கணவனை விரும்பாத இளம் மனைவி-சதை இன்பம் பெற முறுக்குத் தளராத வாலிபனை நாடினால் தவறு இல்லை, அது இயல்பு. ஆனால் சமூகம்