16
ஓ ! ஓ ! தமிழா்களே !
ஏனென்று சொன்னால், நாங்கள், பெரியாரியவை, திருக்குறளை நாங்கள் எப்படி ஆராய்கிறோமோ, அப்படி ஆராய்கிறவர்கள். அவருடைய சிந்தனையிலே பிழையேயில்லையா என்று நீங்கள் கேட்கலாம். பிழை இருந்தது; இருக்கிறது. ஆனால் அந்தப் பிழைகளுக்கும் பின்னால் அவரே தீர்வு கண்டார். தனித்தமிழ் நாட்டுக் கொள்கையைக் கண்டார்
கடவுளைப் பற்றி நாம் கவலைப்பட
வேண்டியதில்லை:
பேரறிஞர் இராமதாசு அவர்கள் கூறியதைப் போல புலவர் திரு.அரசமாணிக்கனார் அவர்கள் 'தமிழும், நாத்திகமும் இரு கண்கள்' என்று கூறினார்களே, அதே போல, கடவுளை மறுக்கின்ற அந்தத் தன்மை, இந்தத் தமிழினத்துக்கு வேண்டும் என்பதற்காக அதைச் சொன்னார்கள். இந்தத் தமிழினத்துக்கு அடிமை எண்ணம் ஒழிய வேண்டும் என்பதற்காக உரிமையை மீட்க வேண்டும் என அவற்றைச் சொன்னார். அவர் கூறிய கருத்து சரியா இல்லையா என்பது பற்றி நாம் ஆராய வேண்டிய தேவையில்லை. அந்த வகையிலே காலத்திற்கேற்ற கருத்துகளாக அவற்றை ஏற்றுக் கொள்ளலாம் என்றுகூட அதைச் சொல்லலாம். ஏன் கடவுள் மறுப்பு கருத்துகள்? கடவுளை அவனுக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கின்றான்; பார்ப்பனியத்துக்குச் சொந்தமானது தெய்வங்களெல்லாம் என்று கூறிக் கொண்டிருக்கின்றான், பார்ப்பான்!
"தெய்வாதீனம் ஜத் ஸர்வம்:
மந்த்ரா தீனந்து தெய்வதம்:
தன் மந்த்ரம் பிராமணா தீனம்:
பிராமணா மம தெய்வதம்:"