உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11

போக்கடித்து விட்டான். அவள் அழகிய மங்கிய சாம்பல் வர்ணக் கால்சட்டை ஒன்றை எடுத்து வந்தாள். அது பெப்பிக்கு ரொம்பப் பெரிதுதான். என்றாலும் சக்கடத்தைத் தவிர்ப்பது எப்படி என்பதற்கு அவன் அந்நேரத்திலேயே வழி கண்டுவிட்டான்.

        'கத்தியை எடு' என்றான்.
         இரண்டு பேரும் சேர்ந்து, அமெரிக்கனின் கால் சட்டையை சின்னப் பையனுக்குத் தகுந்த வசதியான உடுப்பாக மாற்றி விட்டார்கள். கொஞ்சம் தொளதொளப்பான சாக்கு மாதிரி; ஆனால் தொந்தரவு கொடுக்காது; ஒரு கயிறின் உதவியால் அதைத் தோளில் தொங்க விட்டு, கயிறைக் கழுத்தைச் சுற்றிக் கட்டி முடிபோட்டு விடலாம்; கால் சட்டையின் பைகள் பையனின் கைகள் தொங்குவதற்குத் துணைபுரியும் பகுதியாகும் - இப்படி ஒரு பொருள் தான் அவர்களது உழைப்பின் விளைவு.
        அவர்கள் உழைப்பின் நடுவிலே வீட்டு எஜமானியம்மா குறுக்கிடாமலிருந்திருப்பின், அதைவிடச் சிறந்த செளகரியமான உடுப்பு ஒன்றை அவர்கள் உருவாக்கியிருப்பார்கள். அடுப்பங்கரைப் பக்கம் வந்தவள் பல பாஷைகளிலுமுள்ள மிக ஆபாச வார்த்தைகள் பலவற்றையும் கொட்ட ஆரம்பித்து விட்டாள். அவற்றைக் கூட, பொதுவாக எல்லா அமெரிக்கர்களும் செய்வது போலவே, மகா மோசமாக உச்சரித்தாள்.
        சொற் பெருக்கைத் தடுக்கும் திறன் பெப்பியிடமில்லை. அவன் முகம் சுளித்தான்: தன் மார்பைக் கையால் பற்றினான்; செய்யும் வகையறியாமல் தலையைத் தடவினான்; கனத்த பெருமூச்செறிந்தான். ஆனால் அவளோ தன் புருஷன் அந்த இடத்திற்கு வருகிற வரையில் ஓயவேயில்லை.
       ‘என்ன விஷயம்?' என்று விசாரித்தான் அவன்.
        உடனே பெப்பி பேசத் தொடங்கினான்: 'வலின்யார், உங்கள் வலின்யாசா கிளப்பியுள்ள குழப்பத்தைக் கண்டு