பக்கம்:கடவுள் பாட்டு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சுடரும் ஒளியே, இன்னதெனச்
சொல்ல வொண்ணா நுண்ணுணர்வே
அடியார்க் கெளியாய்; அண்டவெளி
யாவும் ஆன பெரும்பொருளே!

31


இன்ப துன்பம் தனக்கென்றே
என்றும் யாண்டும் இல்லாதாய்
அன்பில் லாதார்க் கெஞ்ஞான்றும்
அகன்று செல்லும் வான்போன்றாய்.
அன்பில் அன்பாய்க் கலந்துன்றன்
அன்பர் நெஞ்சில் நிறைந்திருப்பாய்
உன்பொன் னடிகள் தொழலன்றி
ஒன்றும் அறியேன் பெருமானே!

32


பொய்யைத் தொலைத்தாய் வஞ்சகத்தைப்
போக்கி விட்டாய் நெஞ்சகத்தே
மெய்யின் வடிவாய் நீவந்து
வீற்றி ருந்தாய் நான்தொழுதேன்!
ஐயா, உன்னை அடைந்தவர்க்கே
அல்லல் உண்டோ? உன்கருணைப்
பொய்கை நீரில் அழுந்தி விட்டால்
பொசுக்கும் வெம்மை தொலையாதோ!

33


நெக்கு நெக்கு நானுருகி
நேயம் வைத்தேன் உன்னடிக்கே
புக்குப் புக்கென் நெஞ்சகத்தில்
பொருந்தி யிருப்பாய் பெருமானே
மக்கு மக்காய் நானிருந்தேன்.
மறையும் தமிழும் கொண்டுணர்த்தி
மிக்க தக்கான் ஆக்கினைநீ
மேலோய் உன்னைப் போற்றிடுவேன்.

34
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/18&oldid=1201926" இலிருந்து மீள்விக்கப்பட்டது