இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2
கட்டுரைக் கொத்து
என்று எடுத்துக்காட்டையும் இயம்பிச் செல்கிறது. இதில் வீரனது மறம் பேசப்படுதல் காண்க. தானே மறத்தைப்பற்றிப் பேசுகையில்.
- தாம்படைத் தலைக்கொள்ளவும்
- ஒம்படுத்த உயர்புகூறின்று
என்று காட்டி இவ்விலக்கணத்திற்கு இலக்கியமாகக்
- கழுதார் பறக்தலேக் கண்ணுற்றுத் தம்முன்
- இழுதார்வேல் தானே இகலில்-பழுதாம்
- செயிர்காவல் பூண்டொழுகும் செங்கோலார் செல்வம்
- உயிர்காவல் என்னும் உரை.
என்று கூறி, இதில் தானே மறத்து வீரம் ஒதப்பட்ட தைக் காண்க.
இத்துடன் இன்றி இத்தானே மறத்தின் ஆண்மை யினை,
- 'வேற்ருனே மறம்கூறி மாற்ரு தழிபிரங்கினும்
- ஆற்றின் உணரின் அத்துறை ஆகும்'
என்று இலக்கணவகையால் உணர்த்தி, இலக்கிய முறையில்,
- மின்ஆர் சினம்சொரிவேல் மீளிக் கடல்தானே
- ஒன்னுர் நடுங்க உலாய்கிமிரின்-என்ஆம்கொல்
- ஆழித்தேர் வெல்புரவி அண்ணல் மதயானைப்
- பாழித்தோள் மன்னர் படை”
என்றும் அறிவிக்கிறது புறப்பொருள் வெண்பாமாலை,
- தேர் மறமாவது,
- "முறிமலர்த்தார் வயவேந்தன்
- செறிமணித்தேர்ச் சிறப்புரைத்தன்று'