உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

19

பொறுமை உமக்கும் இல்லை தங்களிடம் பாடம் கேட்கும் பொறுமை எனக்கும் இல்லை என்று கூறி, அன்று முதல் பாடம் கேட்கும் பேற்றை இழந்தார் ராஜாஜி!

சென்னை மாநகரிலே இருந்த சிதம்பரனார் மீண்டும் ஒட்டப்பிடாரம் சென்றார். உடன் சகஜானந்தரையும் மீண்டும் அழைத்துச் சென்றார். எல்லா விழாக்களுக்கும் சகஜானந்தரை எங்கு போனாலும் அழைத்துச் செல்வார்! செலவாயிற்றே என்பதை அவர் பொருட்படுத்தமாட்டார்.

எவராவது தன்னுடன் இருக்கும் சகஜானந்தரை நெருங்கி அவரது சாதியைப் பற்றி விசாரித்தால். அவர் துறவி! யோகிகளிடம் சாதியை விசாரிப்பது தவறு என்று சிதம்பரம் கூறுவார்! ஒரு முறை சகஜானந்தரிடம் சிதம்பரனாரின் வழக்குரைஞர் நண்பர்கள் கேட்டபோது, “என்னைச் சிதம்பரனார் தனது பிள்ளையைப் போல பாசத்துடனும், நேசத்துடனும் வளர்த்த பெருந்தகை வள்ளல்” என்றார்.