பக்கம்:கரிகால் வளவன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

நெருப்பு வாண வேடிக்கை செய்துகொண்டிருந்தது. அந்தச் சடசடா ஓசையினூடே அவன் போட்ட சத்தம் வெளியிலே கேட்குமா?

இன்னும் அரை நாழிகையில் திருமா வளவன் உயிரோடு வேகப் போகிறான். தீ நாக்குகள் தாவித் தாவிப் பிடிக்க வருகின்றன. அவன் கனல் வேகம் காந்த, மூலையிலே ஒன்றுகிறான். “அம்மா!” என்று கத்துகிறான். “மாமா!” என்று கூவுகிறான்.

“மாமா!” — நீண்ட கூச்சல் போட்டு விழப் போனான்.

“வௗவா!” என்று ஓர் ஒலி கேட்டது. அவன் சற்று நிதானித்தான். மயக்கம் வந்தாலும் நினைவை இறுக்கிப் பிடித்துக் காதிலே பொருத்தினான். “மாமா!” என்று மறுமுறையும் கூவினான்.

“என் கண்ணே!” என்று ஒரு குரல் பதில் கொடுத்தது.

மாமாவே வந்துவிட்டார். இரும்பிடர்த்தலையார் எங்கெங்கோ அலைந்தவர், அந்த நேரத்துக்கு அங்கே வந்துவிட்டார். எங்கும் அலைந்து அலைந்து தேடினார். இந்த இரவில் இந்தச் சிறு காட்டின் வழியே வந்தார், நெருப்பு எரிவது அவர் கண்ணிலே பட்டது. அங்கே வந்தார், “மாமா!” என்ற குரலைக் கேட்டார். அது வளவனுடைய குரல் என்று தெளிவாகத் தெரிந்தது. ஒரு கணத்தில் எல்லாவற்றையும் ஊகித்துக் கொண்டார். பெரிய கற்களைக் கொண்டுவந்து கதவை உடைத்தார். பிளந்தது கதவு. உள்ளே நோக்கினார். மூலையில் ஒன்றிக்கொண்டு கதறிய இளவரசன் அவரைக் கண்டதும் ஓடிவந்தான். நெருப்பை மிதித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/29&oldid=1344672" இலிருந்து மீள்விக்கப்பட்டது