பக்கம்:கரிகால் வளவன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கொண்டு ஓடிவந்தான். அவரைக் கண்ட வேகத்தில் அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. இரண்டு தாவிலே தாவி இரும்பிடர்த்தலையார் காலடியில் வந்து விழுந்தான். அதன்பின் அவனுக்கு நினைவு தப்பிவிட்டது.

திருமா வளவன் நினைவு வந்து பார்த்தபோது தான் ஒரு கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தான். காலில் ஏதோ எரிச்சல், அருகில் இரும்பிடர்த்தலையார் இருந்தார். கண்ணை விழித்தான்; “மாமா” என்றான்.

“என் கண்ணே! என் வயிற்றில் பாலை வார்த்தாயா?” என்று கேட்டுக்கொண்டே குனிந்து பார்த்தார் அருமை அம்மான்.

“இந்தா, இதைச் சாப்பிடு” என்று எதையோ குடிக்கக் கொடுத்தார். அதைக் குடித்தான். சற்றுத் தெம்பு வந்தது.

“நான் எங்கே இருக்கிறேன்?”

“ஆண்டவன் அருள் நிழலில் இருக்கிறாய் என்று பதில் வந்தது. இரும்பிடர்த்தலையார் தழுதழுத்த குரலோடு பேசினார்.

“அம்மா எங்கே?”

“வந்துவிடுவாள்.”

கருவூரில் யாரும் அறியாத ஓரிடத்தில் இரும்பிடர்த்தலையாரின் பாதுகாப்பில் திருமா வளவன் நெருப்புக் காயம் பட்டுக் கிடந்தான். அவன் காலில் நெருப்புத் தன் சக்தியைப் பூரணமாகக் காட்டிவிட்டது. இரும்பிடர்த்தலையார் சோழ நாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/30&oldid=1344673" இலிருந்து மீள்விக்கப்பட்டது