தாம்பத்ய வாழ்வில் ஈடுபட்டுப் பல வருஷங்கனானாலும் சரி. கணவன் மனைவியிடம் அன்பும், மனைவி கணவனிடம் அன்பும் காணிக்கையாக்கி காதல் வாழ்வு வாழ வேண்டியது இன்ப வாழ்வுக்கு முக்கியமானது.
இப்படிச் சொல்லும் போது, கணவனும் மனைவியும் சினிமாக் காதலன் காதலி போல ஒடிப் பிடித்து விளையாடவேணும், கட்டியணைத்து கண்ணாமூச்சி யாடி காதல் கீதம் பாடவேணும் என்று குறிக்கவில்லை.
கல்யாணமான புதுதில், புதுமாப்பிள்ளைக்கு தன் இளம் மனைவியை அடிக்கடி காண வேண்டும், அவள் அலைவீசும் மணம், 'பட்டுடை வீசு கமழ்தல்' முதலியவைகளை நுகர வேண்டும் அவள் பேச்சை, சிரிப்பை, உளறல எல்லாம் சகிக்க வேண்டும்-என்ற ஆசை அதிகமிருக்கும். இவற்றின் பயனாக அவளைத் தொட வேண்டும், அருகணைய வேணும், அவளைத் தொட்டுப் பிடித்து, வருடியணைந்து அவளது மேனியின் மென்மையை, நயங்களை, இளமையை, பெண்மையை உணர வேண்டும் எனும் அரிப்பு மிகுந்து கிற்கும். ஆளனின் வலிவையும் வனப்பையும் உணரும் துடிப்பு அவளுக்கு மிருக்கும்.
ஆணும் பெண்ணும் கல்யாணமான பிறகு காதல் புரிய வேண்டியது அவசியம் என்று குறிக்கும் போது, புதுமை அரிப்பிலே அவர்கள் ஆடித் தீர்க்கும் 'சில்லுண்டி விஷமங்களை' என்றும் விளையாடிக் களிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
பெண்னேயே பார்த்துக்கொண்டிருப்பதில் புது மாப் பிள்ளைக்கு தனி 'இன்ட்ரஸ்ட்' இருக்கலாம். ஆணழகை அள்ளி விளுங்குவதில் மணமகளுக்குத் தனிமகிழ்வு உண்டு. ஒருவரை யொருவர் இடித்துக் கொண்டுபோவது, உரசி விட்டு ஒடுவது தொட்டு விட்டுச் சிரிப்பதி லெல்லாம். சந்தோஷம் காணலாம்-வாழ்வின் ஆரம்பத்திலே.
இவ்வித இளம் பருவ ஆடல்களைக் காதல் என்று. குறிப்பிட வில்லை நான்.