உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கழுதை அழுத கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுதை அழுத கதை


அருமையான கொள்கைக் காட்சியைக் கனவில் நின்று இயங்கிக் காட்டிய அக் கழுதைகளைக் காண அங்கும் இங்குமாக அலைகின்றார். அந்தோ, ஓ! ஒl. ஒரு புதர்ப் பக்கத்தில் அவையிரண்டும் பின்னிப் பிணைந்தவாறு பிணமாய்க் கிடக்கின்றன!. அவரின் விழிகளில் ஈரம்! ...

இப் புறவலைக்குள்தான் - இக் கதையுறுப்பினர்களின் ஆட்டங்கள் பாட்டங்கள் - கூட்டங்கள் - நோட்டங்கள் - ஊட்டங்கள் வாய்ந்த உருப்படிகள் செறிந்த பல்வேறு குமுகச் சிந்தனைத் தேட்டங்கள்!... என மிகப் பலவான கருத்திழைகளின் ஊடோட்டங்களாலாகிய அருமையான பின்னற்புனைவு உட்பொதிந்து வைக்கப்பெற்றுள்ளது.

கதைத் தொடர்ச்சியின் ஈற்றில் - புதினம் போன்ற விறுவிறுப்பு!...

கதை சொல்லுதற்கேற்ற எளிமைவாய்ந்த பா நடையிலமைக்கப்பெற்றுள்ள இவ் இலக்கியம் தொடர் நிலைப் பாவியமாகத் தொடர்கையில் - கதையை, அடுத்து ஆவலொடு எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வண்ணமாக - ஒவ்வொரு தொடரின் இறுதியையும் புதினம் போன்ற விறுவிறுப்பு அமைப்பில் ஆசிரியர் கட்டமைத்து வழங்கிவந்தமை இவ்விடத்தில்

குறிக்கத்தக்கதாகும்.

1. "முட்டி நினையா முழங்கால்நீர் ஓட்டத்தில்

பெட்ட்ைக் கழுதை பிழைத்திருக்கக் கண்டதுவே!"

(811–812)

2. "வல்லெனவே பாய்ந்திடக் கால் வாங்க முனைகையிலே

நில்லெனவே ஒர்சொல் நிலமதிரக் கேட்டதுவே!"

(909-910)

-க0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/11&oldid=1400498" இலிருந்து மீள்விக்கப்பட்டது