ാണ്ടൂ മാ
யெண்ணிக் குமைந்து நைந்து - இக் கதைப் பாவியத்துள் - அவைபற்றிய தம் ஆற்றாமைகளை விலங்குகளைவிட்டே பேசவைத்திருக்கின்றார்!
இக் கதையுள் - மாக்களாகிய விலங்குகள் - மக்களாகிய மாந்தரை மிகப்பல இடங்களில் இழித்துரைக் கின்றன! மாந்தரின் கயமைத் தன்மைகளை - போலித் தன்மைகளை - ஏய்ப்புகளை- ஏமாற்றுகளை - அவ் விலங்குகள் சுட்டிக் கூறும் காட்சிகளில் மனம் பதிக்கையில் - "ஆம்! இம் மக்கள் அம் மாக்களினும் மிகத் தாழ்ந்தோராய் இயங்குகின்ற நிலைகள் அறவெறுக்கத் தக்கனதாம்!” என்னும் உணர்வே நமக்கும் ஏற்படுகின்றது! -
"சின்ன உளம் பெற்ற சீர் அறியா மக்கள்" (97), "மக்கள் என்ற பேராலே வாழ்ந்துவரும் மாந்தர்" (99), "கல் வன்மனத்து மாந்தர்” (178), 'உண்கவளத்திற்காக உள்ளத்தை விற்கின்ற மக்கள்" (1258), "மக்களென வாழ்ந் திருக்கும் மாண்பவிந்த கூட்டம்" (1754), "மக்களெனும் நாகரிக மாக்கள்" (15.5) - என்றவாறு இக் கதைப் பாவியத்துள் வரும் வரிகள் - மக்களைச் சுட்டி விலங்குகள் பேசும் சில இடங்களாகுவன. அக் குறிப்பீடுகளினுள் - இக் கால மக்களின் இழிநிலையமைவு பற்றிய நம் ஐயா அவர்களின் பொதுக் கருத்தும் - அதற்கென அவர் இரங்கலும் எரிச்சலும் - அவ் விழிவான தகைமையின்மைகளை அன்னாரிடமிருந்து தகர்த்தெறிய விரும்பும் அவரின் நன்னோக்கமும் பதிவுற்றுள்ளன!
“எத்தனைப்பேர் வந்திவ் வுலகத் திழிவகற்ற
எத்தனையாய்ச் சொன்னார் எதுவும் பயனிலையே! -
(1289–1290)
—o st