உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கழுதை அழுத கதை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

óóの2.多 学(。多 óの22ラ

கிடக்க விருப்பமிலா அக் கழுதையும் அதன் குட்டியும் - காளையுடனாக நாட்டைவிட்டுப் புறப்பட்டுக் காடு நோக்கிச் சென்றமை - உரிமை வேட்கையில்தான் என்னும் கருத்துக் குறிப்புக்கள் - குட்டிக் கழுதையின் கூற்றுகளில் பதிவுற்றுள்ளன.

காண்க: 1. "நல்லுரிமை நாடி நடந்தலைந்து" (1759)

2. "அன்னவொரு கூட்டத்தை ஆழ வெறுத்

தொதுக்கித் தன்னேர் உரிமைக்குத் தான்துணிந்து

பாடுபட்டார்”

(1779-1780)

(எல்லா உரிமைகட்கும் மேம்பட்டது வாழ்வுரிமை என்னும் கருத்துப்பெறக் குட்டிக் கழுதை ஆற்றிய உரையாக.) - காண்க: 3. வாழப் பிறந்துவிட்ட வல்லுயிர்கள் அத்தனைக்கும் குழும் நலன்களிலே சொத்துரிமைக் கும்மேலாய் உள்ளதெது? வாழ்க்கை உரிமையன்றோ?

அவ்வுரிமை தள்ளப் படும்பொழுதில் தான்வாழ்தல்

- கீழ்மையன்றோ? (1781-1784) பெண்ணுரிமை:

பெண்ணொருத்திக்குத் தன் கணவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையினைத் தர வேண்டும் என்பது, வாழ்வியல் முறைமை பற்றிய அவரின் கொள்கையாகவே இருந்தது. பெண்ணுரிமைக் குரியதாகத் தாம் கொண்டிருந்த நயன்மையுணர்வைப்

مسبباتنا متسممسـ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/35&oldid=665365" இலிருந்து மீள்விக்கப்பட்டது