の列@の2ó ダ@22列 óの22う
எனினும், - மெல்லிய நடையூடாக - வல்லிய அவரின் பாத்திறச் சிறகடிப்பு சில்லிடங்களில் இயல்பா யெழுவதையும் - அவ்வவ்விடங்களுக்குரிய தகைமை வாய்ந்த அருஞ்சொற்கள் இடையில் அணிவேய்ந் திருக்கும் நிலையையும் - அவற்றை அவராலேயே தவிர்க்கவியலாமற் போயுள்ளமையையும் நாம் காண வியல்கின்றது! இவற்றைத் தொடக்க நடையிடையிலேயே தெளிவாகவுணர்ந்து - இப் பாவியத் தொடர்ச்சி 3-இன் இறுதிப் பகுதியினடியில்,
"இதில் சிறுவர்களுக்குப் புரியாத சில சொற்கள் வந்திருப்பின் பெரியோர்களும் ஆசிரியர்களும் அவற்றை நன்கு படித்துக் காட்டி விளக்க வேண்டுகின்றோம்!". என்றவாறு ஐயா அவர்கள் அக்கால் பதித்து வைத் துள்ளமையிலும் புலனாகின்றது!
கதைக் கருவைச் சூழ்ந்துள்ள புறவலை!.
ஒரு பொங்கல் நாள். அந் நன்னாட் காலையில் பொங்கல் அருந்தியபின் ஆற்றங்கரைக்குக் காற்றாடச் செல்கின்றார், இவ் இலக்கிய ஆசிரியர்! ஆற்றங்கரைப் பாங்கில் காற்று வீசிக் கொண்டிருக்கின்றது! அப்பொழுது, தாயும் மகளுமான இரு பெட்டைக் கழுதைகள் ஆங்கு வாயவிழ்த்துக் கத்திக் கொண்டிருக்கின்றன!
இயல்பாகக் கத்தும் அவற்றின் கடுங் கரகரப்பார்ந்த இழுப்புவாங்குங் குரல்கள் கேட்சியின்வழி - அவை, ::: ஏதோ ஒரு துயரவுணர்வைப் பரிமாறிக் கெர்ள்ளும் காட்சியாகவே - அழுது புலம்பி வருந்தி அவற்றுக்குள் ஏதோ செய்தி சொல்லிக் கொள்ளும் காட்சியாகவே இவர்க்குப் படுகின்றது. இவர் மனமும்