உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii பட்டுள்ளன. நாட்டுப்புறக் கதைகளிலும் கதைப்பாடல்களிலும் பிற கலைவடிவங்களிலும் படைக்கப்பட்டுள்ளன. இக்கால இலக்கிய வடிவங்களிலும் பல்வேறு கலை வடிவங்களிலும் படைக்கப்பட்டுள்ளன. பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் படைக்கப்பட்டுள்ளன. திரைப்படம், வானொலித் தொடர், தொலைக்காட்சித் தொடர், மேடை நாடகம், பள்ளி, கல்லூரி மேடைகள், இலக்கிய விழாக்கள், சொற்பொழிவு, கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், ஆய்வு எனப் பல நிலைகளிலும் முறைகளிலும் இந்த இதிகாசக் கதைகள் நாடு முழுவதும் பரவியுள்ளன. காலந்தோறும் நிகழும் இத்தகைய நன்முயற்சிகளின் தொடர்ச்சியாகக் கவிஞர் வாலி இக்காலத்தில் மிகவும் செல்வாக்குற்றுத் திகழும் புதுக்கவிதை வடிவில் கம்பராமா யணம், வில்லிபாரதம் ஆகியவற்றைத் தழுவி முறையே அவதார புருஷன், பாண்டவர் பூமி என்னும் அழகிய பனுவல்களை எளிய இனிய தமிழில் படைத்துள்ளார். கவிஞர் வாலியின் அவதார புருஷன் வெளிவந்த உடனேயே அதனை நன்கு ஆராய்ந்து தமிழ் மூதறிஞர் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் தனது 82வது அகவையில் கவிஞர் வாலியின் அவதார புருஷன்-ஒரு மதிப்பீடு என்னும் ஆய்வு நூலை 1997-இல் அழகுற வெளியிட்டதைத் தமிழுலகம் நன்கறியும். . அவ்வாறே, கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி வெளிவந்த உடனேயே அதனையும் நன்கு ஆராய்ந்து இப்போது கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு என்னும் இந்த ஆய்வு நூலைத் தனது 87ஆவது அகவையில் பேராசிரியர் சுப்பு ரெட்டியார் வெளியிட்டுள்ளார். ஒரு படைப்பு வந்ததும் அதனை உடனே திறனாய்வு செய்து நூல் வெளியிடும் நல்ல மரபைப் பேராசிரியர் தமிழுக்குத் தோற்றுவித்திருப்பது மிகவும் பாராட்டற்குரியது. திரைப்படப் பாடலாசிரியராகவும் கவியரங்கக் கவிஞராகவும் பொய்க்கால் குதிரைகள் முதலிய படைப்புகள்