பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii வாயிலாகவும் கவிஞர் வாலி தமிழுலகிற்கு நன்கு அறிமுக மானவர். புகழ்பெற்ற படைப்பாளியான அவர், புகழ்பெற்ற இராமன் கதையை அவதார புருஷன் என்னும் தலைப்பிலும் புகழ்பெற்ற பாரதக் கதையைப் பாண்டவர் பூமி என்னும் பெயரிலும் புகழ்பெற்ற புதுக்கவிதை வடிவில் படைத்ததன் வாயிலாகப் புகழின் உச்சியை எட்டியுள்ளார். அன்னாரின் பாண்டவர் பூமி குறித்த பேராசிரியர் சுப்பு ரெட்டியாரின் மதிப்பீட்டை இனி நோக்கலாம். கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி - ஒரு மதிப்பீடு என்னும் இந்த நூல், நூல்முகம் நீங்கலாகப் பன்னிரண்டு இயல்களைக் கொண்டுள்ளது. திருமாலின் தசாவதாரங் களுள் கிருஷ்ணாவதாரமே ஆழ்வார்களை மிகவும் ஈர்த்தது. பாரதியாரும் கண்ணனைக் கதாநாயகனாகக் கொண்டு கண்ணன் பாட்டுப் பாடினார். தூது போனவன் ஏற்றம் சொல்வது பாரதம் என்னும் பூர்வசனபூஷண வாக்கும் எழுந்தது. செளலப்பியமே வடிவெடுத்தவன் கண்ணன். கண்ணன் இல்லையென்றால் பாரதமே இல்லை. இவ்வாறு கண்ணன் பெருமை பேசிப் பாரதத்தை ஆசிரியர் நூல்முகம் என்னும் பகுதியில் அறிமுகப்படுத்துகிறார். அன்றியும், கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி என்னும் பெயர் அந்நூலுக்குப் பெருந்துமாற்றையும் இப்பகுதியில் புலப் படுத்துகிறார். . தோரணவாயில் என்னும் முதல் இயல் பாரதக் கதை மாந்தர்களை அறிமுகப்படுத்திப் பாண்டவர் பூமியில் கவிஞர் வாலி செய்துள்ள புதுமைகளைச் சுட்டிக் காட்டுகிறது. விதுரனின் திருமணம், கண்ணனை விதுரன் மனைவி வரவேற்றமை, விதுரனின் முற்பிறப்பு வரலாறு போன்றவை வில்லியில் இல்லை என்பதை எடுத்துக்காட்டி இத்தகைய மாற்றங்கள் பாண்டவர் பூமி என்னும் காவியத்தின் கதை யோட்டத்திற்கும் சுவைக்கும் துணை செய்வன்வாக உள்ளன