பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தகுதியிலார் தம்புகழே பரப்பு தற்குத் தாளமிடும் நட்புண்டு; நண்பர் தம்முள் பகைவிளைத்துக் கோள்சொல்லி இன்பங் கானும் பதர்மனிதர் நட்புண்டு; மூன்று நான்கு பகலிருக்கும் சிற்றுண்டி நட்பும் உண்டு; பண்பில்லாச் சிறுமதியர் செய்த ஒன்றை மிகவுரைத்து மகிழ்கின்ற நட்பும் உண்டு; மெதுவாக வஞ்சிக்கும் நட்பும் உண்டு; தொடர்வண்டி நட்புண்டு; பயனில் பேச்சுத் துணைக்காகத் திரிந்துவரும் நட்பும் உண்டு; குடர்மிகுந்த தொந்திக்குப் பூசை செய்யக் கும்பிட்டு வால்பிடிக்கும் நட்பும் உண்டு; பிடர்சொரிந்து வாய்பிளந்து புகழ்ந்து பேசிப் பின்புறத்து வசைமொழியும் நட்பும் உண்டு; கடன்தந்து வளர்க்கின்ற நட்பும் உண்டு; காசினியிர் ஈதெல்லாம் நட்போ சொல்வீர்” . இப்படிக் கிண்டலும் கேள்வியும் குத்தலும் கொள்லை யுமாய் அமைந்த அழகான வரிகள் இன்னும் எத்தனை எத்தனையோ மற்றும் கவிதைகள் முழுவதிலும், ஆசிரியரின் பழந்தமிழ்ப் புலமையும் பாட்டுத் திறனும் ஒருங்கே பரவிக் கிடக்கின்றன என்றாலும் மிகையன்று. உ ண் ைம யி ல் பேராசிரியர் டாக்டர் அ. சிதம் பர நாத னார் தந்துள்ள முன்னுரை இந்நூலுக்குப் பொன்னுரையாகவே பொலிந்து அழகு செய்கிறது. எளிமையும் கவர்ச்சியும் இணைந்த வெளியீடு. - சுதேசமித்திரன், 1960.