பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கவியரங்கில் முடியரசன்' பற்றிச் சுதேசமித்திரன்........ கவிதைகள் யாவும் பட்டை தீட்டப்பெற்ற பளிங்குக் கண்ணாடி போலவே பலவேறு கோணங்களிலும் கவித்துவக் காட்சி தருகின்றன. எடுத்துக்கொண்ட ஒவ்வொரு கவிதை யிலும் எழுச்சி மட்டுமா .ே த ள் தட்டுகின்றது? அல்ல, கூடவே இயற்கையாக அமையும் சொல்வண்ணம் இன்னிசையாகவே அமையும் சந்தநயம், எண்ணச் சிறப்பாகவே மலரும் உவமையின்பம், அத்தனையும் கவிதை ஒவ்வொன்றுடனும் நடைபோட்டுச் செல்கின்றன. அவை மட்டுமன்று, குறிப்பாக இன்னும் ஒன்றைக் கூறவேண்டும். தடம்புரண்டு தம்போக்காய் எழுதுவதுதான் தற்காலக் கவிதை இலக்கியம் என்னும் தவறான கருத்துக் கொண்டிருக்கும் இ ன் ைற ய எழுத்துலகில், தமிழ் மரபு வழுவாமலும், தரம் குறையாமலும் கவிதைகளை ஆக்கித் தந்துள்ளார் கவிஞர் என்பதுதான் அது ! தமிழுலகம் வரவேற்றுப் பயனடையுமாறு பல நல்ல கவிதைகள் உண்டு. இத்தொகுதியில் பெரும்பாலானவை மிகமிகச் சு ைவ ய க ேவ உள்ளன, எடுத்துக்காட்டாகச் சொல்லின் , வி ரி வ ஞ் சி ஒன்றிரண்டைச் __ சொல்லலாம் எண்ணம், நட்பு முதலிய கவிதைகள் அத்தகு சிறப்பைப் பெற்றவை. நட்பைப் பற்றிக் கூறும்பொழுது நடைமுறை உலகில் உள்ள இன்றைய நட்பை, மெல்லிய நகைச்சுவை இழையோட எவ்வளவு நயமாகக் கூறுகிறார் பாருங்கள் :