பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

 யெல்லாம் வென்றுவிட்டார் இவர், என்பதை இந்நூல் முழுதும் ஓதுவோர் கட்டாயம் நன்கறிவர் என்று கருதுகிறேன்.

உள்ளத்தாற் பெருமனிதர் ஆய காமராசரையும், திடங் கொண்டு அரிய பல செய்த பெரியாரையும், செந்தமிழ் நாட்டுக்குச் சிறந்த தொண்டாற்ற முன்வந்துள்ள அறிஞர் அண்ணாவையும் இவர் எத்துணைப் போற்றியுள்ளார் என்பது பாடல்களைப் படிப்போரால் நன்கறியப்படும்.

'சிறுவயிறு கழுவுதற்கு மானம் விட்டுச்
 சீரிழந்து வால்பிடித்தல் வேண்டா'

என்றும்,

மேலுயர்ந்த கோவிலுளும் தமிழே வேண்டும்
வல்லுறாய் வருமொழிகள் இங்கு வேண்டா'

என்றும் முடியரசனார் முழங்கும் முரசொலி இந்நூலகத்தே கேட்கப்படுகின்றது.

கவிஞர் பெருமகனார் முடியரசன் அவர்கள் நெடுங்காலம் உடலுரத்தோடு வாழ்ந்து மேன்மேலும் இதைப்போன்ற கவிச் செல்வத்தைத் தமிழகத்திற்கு வாரி வழங்க வேண்டுமென்று கருதுகின்ற தமிழ்மாணவர் பலரில் நானும் ஒருவன்.

சென்னை-5 அ. சிதம்பரநாதன் 14-4-1960