பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 தாரா என்ற வினாவை எழுப்பி, முழுதும் ஈந்து முழுப்புகழை யும் தமதாக்கிக்கொண்டவர் அவர் என விளங்க வைத்த திறமை மதிக்கத்தக்கது. அள்ளிஅள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான் அழகாகப் பேசுதற்கு வாயை ஈந்தான் உள்ளமெனும் ஒருபொருளை உரத்துக் கீந்தான் உடம்பினையும் கொடுநோய்க்கே ஈந்தான் அந்தோ! வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு வினைமுயற்சி அத்தனையும் கல்விக் கீந்தான் உள்ளதென ஒன்றில்லை அந்தப் போதும் உயிருளதே கொள்கனைச் சாவுக் கீந்தான்' எனப் பாடியுள்ள கவியில் அடங்கிக் கிடக்கும் உயரிய கருத் துக்களும் பொங்கித் ததும்பும் உணர்ச்சிகளும் இக்கவிஞரின் ஆற்றலுக்குச் சான்று பகர்கின்றன. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தலைப்பில் என் தலைமையில் சில ஆண்டுகளுக்குமுன் திருச்சி வானொலி நிலையத்தின் கண் கவியரங்கு ஏறிய இக்கவிஞர் யாதும் நம் ஊரென்றால் ஏதிலர்தம் நாடெல்லாம் சூதுமுறை செய்து சுருட்டி விழுங்குவதா? யாதும் நம் ஊரென்றால் ஏதிலர்க்கு நம்நாட்டைச் சூதுநெறி யறியாமல் சுருட்டிக் கொடுப்பதுவா?’’ என்றும், ஊர்காத்தும், நகர்காத்தும், உயர்நாடு தனைக்காத்தும் பார்காத்தும் யாதும் ஊர்ப் பண்புணர்ந்து மிகக்காத்தும் தற்காத்தும் தமிழினமுங் காத்துலகங் கேளிர் என்ற சொற்காத்தும் நல்லறிஞர் சூழ்துணையால் நாம்வாழ்வோம்’ ’ என்றும் பாடி அறிவுறுத்தினமையைக் கேட்டு மகிழ்ந்தோர் பல்லாயிரவர். பாரதியார் இக்கவிஞருக்குப் பாட்டனார்; பாரதிதாசனார் இககவிஞருக்குத் தந்தை போன்றவர். அப்பெருங் கவிஞர் களுடைய வழியிற்சென்று ஒவ்வொரு விதத்தில் அவர்களை