பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அதியன்' என்ற பாடற் பகுதியால் இவருடைய நன்றி யுணர்வு நன்றாக வெளிப்படுகிறது.

  • தந்தாய்! என்னுயிர் தந்தாய்! என்கோ

அன்னாய் ! என்னுயிர் அன்னாய்! என்கோ இன்னருள் புரியும் என் கோ! என்கோ’’ என்ற இடத்திலும், உயிர்காத்த உத்தமனே! என்பாற் கண்ட உயர்வென்ன? தமிழன்றி வேறொன் றில்லை; செயிரில்லாச் செந்தமிழைப் பாடும் வாயில் செங்குருதி சிந்துவதா என நினைந்தோ? உயிர்பிழைத்தால் இவனும் போய்த் தமிழைக் காப்பான் உயர்கவிதை பலதருவான் எனுங்கருத்தோ? அயர்வின்றி அருகிருந்து காத்த தாயே! ஆலயமாம் என்னுளத்தில் அமரும் தேவே!" என்ற இடத்திலும் இவருடைய நன்றியறிவு உணர்ச்சிததும்பி வெளிப்படுகின்றது என்பதைப் ப ல ர் ஒப்புக்கொள்வர். வள்ளல் அழகப்பரைப்பற்றி இ வ. ர் பாடியுள்ள பாடல்கள் மிக்க கவிநயம் வாய்ந்தவை. பொருள் கொடுத்தான் மிகக்கொடுத்தான்; அதனின் மேலாப் புகழ்கொண்டான்; கொடைசிறிது, சிறிய ஒன்றால் அருள் பழுத்தான் கொண்டதுதான் மிகுதி என்பேன்; அதிலென்ன வியப்புளதோ? மேலும் அன்னான் ஒருவகையில் கஞ்சனெனக் குறையும் சொல்வேன்; உவந்தளித்தான் நிதியமெலாம், உண்மை, ஆனால் வருபுகழில் சிறிதேனும் பிறர்க்கீந் தானோ? வருகின்ற புகழெல்லாம் வைத்துக் கொண்டான்' எனக் கூறிய இடத்தில் அழகப்பச்செட்டியாராகிய பெரும் வள்ளலைக் கஞ்சன் எனக் குறைகூறுவதுபோல் கூறிப் புகழ்ந் துரைத்த திறம் வியக்கத்தக்கது. அவருடைய செல்வத்தை யெல்லாம் உவந்து அளித்தார் என்பது உண்மையாயினும், அவருடைய புகழைச் சிறிதாவது எவருக்காவது பகிர்ந்தளித்