பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பருப்பதற்கோ? செந்தமிழ்நற் றமிழர் வாழ்ந்து பாரதமும் வாழ்கவென உணர்ந்தே சொன்னேன் மறுத்துரைத்தால் ஈரோடும் காஞ்சி யுந்தாம் வழிசொல்லும்; புதியதொரு விதியும் செய்யும் என்று பாரதி உரைத்ததாக இக்கவிஞர் காட்டுகின்ற இடத் தில் இவருடைய தன் மான உணர்ச்சியும் வீரமும் பொங்கக் காண்கின்றோம். சின்ன ஒரு புழுவேனும் உரிமை காக்கச் சிறுவதை நம் கண்ணால் காணுகின்றோம். ஆயினும் நம் நாட்டில் மக்கள் நல்ல தமிழ் எழுதுகின்ற உரிமையையும் நல்ல த மி ழ் பேசுகின்ற உரிமையையும் பாதுகாப்பதற்கு முன்வராமல் இருக்கிறார்களே என்று இக்கவிஞர் இசங்கு கிறார் என்பது உரிமை என்ற தலைப்பில் வந்துள்ள பாக் களால் தெரியவரும். தமிழ் மக்கள் வீரம் உடையவர்களாக இருந்தாலன்றி நல்வாழ்வு பெற முடியாது என்பதைத் தமிழ் வாழ்வு எ ன் ற தலைப்பில் அமைந்த பாடல்கள் வற்புறுத்தும். வேலெடுத்துப் போர்தொடுத்த வீரம் எங்கே? வெங்குருதி வாளெங்கே? தோள்கள் எங்கே? கோலெடுத்த பேரெல்லாம் ஆள வந்தார் கொட்டாவி விட்டபடி துங்கு கின்றாய்; மாலுடுத்த தமிழ் மகனே மானம் எங்கே? மயங்காதே விழி! எழு! பார்! உலகைநோக்கு! கால்பிடித்து வாழ்வதுவோ தமிழ வாழ்வு? கானத்துப் புலிப்போத்தே வீரம் காட்டு!” என்ற இவரது கவியினைப் படிக்கின்றவர்களும் கேட்கின் றவர்களும் உடனே விழித்தெழுந்து வீரம் காட்டுவர் என்பது உறுதி. இக்கவிஞருடைய நன்றியுடைமை இத்தொகுப்பினுள் நன்கு விளங்குகின்றது. புதுக்கோட்டையில் திருக்குறட் கழகம் அமைத்து நற்றமிழ் பரப்பிவரும் திரு. பு: அ.. சுப்பிர மணியனாரைப்பற்றி இ வ. ர் எழுதியுள்ள எனக்கும் ஒர்