பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திரு. வி. க. அவர்களைப்பற்றிப் பாடியுள்ள பாடல்களில், குறள் என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவரும், குலவு தமிழ் இலக்கணத்தை என்றும் அறியாதவரும் குற ளிடத்துக் குறைசொல்லித் திருத்தம் செய்கிறார்களே என்று வருந்தியுரைத்து, திரு.வி.க. அவர்கள் கற்றுத்தேர்ந்த மொழி யறிவினராய் விளங்கி, எவ்வாறு திருக்குறளுக்கு நல்லுரை எழுதித் தந்து, குறள் நெறிப்படி வாழ்ந்து காட்டினார் என்பதை இ வ் வ ா சி ரி ய ர் எடுத்து விளக்கியுள்ளார். முயல்வோம் வெல்வோம்’ என்ற தலைப்பில் வந்துள்ள கவிதைகள் ஒன்றனுள் * கற்றறிந்த சான்றோரும் திருக்கு றட்குக் கண்டுணர்ந்து பொருள் சொல்ல அஞ்சு கின்றார்; சிற்றறிவால் தமிழ்நூலின் பெயர்கள் தாமும் தெரியாதார் புத்துரைகள் சொல்லப் போந்தார்; கற்றினங்கள் சிறுகுட்டை கலக்கல் ஆகும் கடல்தனையே சேறாகக் கலக்க எண்ணின் முற்றுறுமோ? நீந்துதற்குச் சிறிதும் கல்லார் முழுகாதீர் குறட்கடலுள் என்போம் என்போம்’ ’ என்று கூறியுள்ளார். தமிழர் நூல்களைப்பற்றிக் கண்டபடி கண்டவர்கள் கதைத்துக் குழப்புகின்றார்களே என்றும் இவர்களைத் தட்டிக் கேட்போர் இல்லையே என்றும் மிகவும் உளைந்து அவர் எழுதியுள்ளமை அறியப்படும். கனிவான தமிழ்மொழியை வளர்ப்போம் காப்போம்; கடுகிவரும் பகையுள தேல் எதிர்ப்போம் மாய் ப்போம்’ ’ என்று அவர் அறைகூவுவது நோக்கத்தக்கது. ப ா ர தி ஊதிய சங்கினை அகக்காதால் கேட்டு இக்கவிஞர் பாடுவ தாக வரும் பாடலில், சிரிப்பதற்கோ உரிமைப்போர் தொடுத்து நின்றோம்? செந்நீரும் கண்ணிரும் சிந்திக் காத்தோம்? - பறிப்பதற்கோ தென்னாட்டார் உரிமை எல்லாம்? பாரதத்தின் பெயர்சொல்லி வடக்கு மட்டும்