பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சொற் களஞ்சியத் தலைமை ஆசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதனார், எம். ஏ., எம். எல். சி. அவர்கள் வழங்கியருளிய .ெ ட | ன் னு ைர கவிஞர் முடியரசனால் அப்போதைக்கப்போது இயற்றப் பட்ட சில பாக்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. இதனைப் படித்துப் பெருமகிழ்வு எய்தினேன். தொட்ட தொட்ட இடமெல்லாம் கவித்துவம் திகழக் கண்டேன். இந்நூலில் அடங்கியுள்ள கவிகள் நாவிற்கும் காதிற்கும் மாத்திரம் இனியன என்பதன்று; சிந்தைக்கும் மிக இனியன. தாம் கருதுகின்ற கருத்தினை உணர்ச்சியோடு உரைத்துப் பிறர் உள்ளத்திற் குடிகொண்டு விடுகின்ற பெற்றியாளரே கவிஞர் எனத்தக்கார் என்று ஒரு கவியிலக்கணம் உண்டு. அவ் விலக்கணத்திற்கொப்ப இக்கவிஞர் பெரியார், வீசித் தள்ளியுள்ள கவிச் செல்வங்களை எடுத்துத் துய்க்கும் வாய்ப்புப் பெறுவோர் உண்மையில் பெரும்பேறு பெற்றவரே ஆவர். இக்கவிதைத் தொகுப்பினைப் படிக்குங்கால், பண்டைய சங்ககால நன்னினைவுகள் பல உண்டாகின்றன. புறநானூறு , நற்றிணை, கலித்தொகை, திருக்குறள், பாரதியார் பாடல் கள், பாரதிதாசனார் கவிகள் முதலிய மனக்கும் நெடுஞ் சோலையில் உலவி வருவதுபோன்ற எண்ணம் இந்நூலொடு சுற்றுங்கால் ஏற்படுகின்றது. காரைக்குடியில் திருக்குறட் கழகத்தில் அடிக்கடி இக்கவிஞர் கவி பாடியும் சொற்பொழி வாற்றியும் மக்களைச் செவிச் செல்வத்தில் மாழ்குமாறு செய் துள்ளார். திருக்குறளிடத்து இக் கவிஞருக்குள்ள மட்டிலாப் பற்றும் காதலும், எல்லையில்லா மதிப்பும் பெருமையும் இவருடைய கவிகள் பலவற்றில் தெளிவாக விளங்குகின்றன.