பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ரிைந்து ரை கவிஞர் முடியரசன் அவர்களைத் தமிழகம் நன்கறியும். அவர்தம் கவிப்பெருமை வெளிநாடுகளிலும் பரவி வருவதை நாம் உணர்வோம். முத்தமிழ்விழா, கோவையில் நடை பெற்றபோது முதற்பரிசு பெற்றது முடியரசன் கவிதை. அன்று, மு டி ய ர ச ன் கவிதையைப் பரிசுக்குரியதெனத் தேர்ந்தெடுத்துப் பாராட்டியவர் பு ர ட் சி க் க வி ஞ ர் பாரதிதாசனார். அன்றுமுதல் எத்தனையோ கவியரங்கங்களில் முடியரசன் பங்குகொண்டு, தமக்கெனத் த னி ெய | ரு சிறப்பிடமும் பெற்று வருகிறார். மாற்றுச் சிறந்த கவிதைகளை, அறிவெனும் உரைகல்லால் ஆய்ந்துரைத்த, செந்தமிழ்க்குக் காவலராம் சிதம்பரநாதனார்க்கு எங்கள் நன்றியினைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம். "எல்லார்க்கும் புரியும் வசன கவிதைகள் பன்மொழிக் கலப்போடு, பகட்டு நடைபோடும் இக்காலத்தில், எளியன வாக, அதற்காகத் தமிழின் இயல்பை விட்டுவிடாமல்இனியனவாக, அதற்காக இலக்கணத்தைப் பு ைத த் து விடாமல்-பல்லாயிரக்கணக்கான மக்களும் புரிந்துகொண்டு போற்றும்படியாக, அதற்காகக் கவிஞரின் ஏற்றத்தை இழந்து விடாமல் கவியரங்கேறியவை கவிஞர் மு. டி ய ர ச ரிை ன் பாடல்கள். இதற்குச் சான்று, இதோ அவரது கவிதைகளே. படி த்துச் சுவையுங்கள். தமிழண்ணல் 15–4–1960