பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. தி ப் பு ைர கவிஞர் முடியரசனின் முப்பத்து நான்காவது அகவை முதல்_முப்பத்து ஒன்பதாவது அகவை வரை (1954-1960) அரங்கேறிய கவிதைகளில், ஒரு சிலவற்றின் தொகுப்ப்ே இந்நூல், கவிஞரின் பிற கவிதை நூல்க்ள். பல பதிப்புகள் வெளிவந்த போதிலும், இக் கவியரங்கில் முடியரச்ன்' 1960 இல் முதற்பதிப்பாக வெளிவந்த பிறகு, முப்பத்து நான்கு ஆண்டுகள் கழித்து, 1995 இல் இப்போது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. கவிஞரின் இசைவுடன் இப் பதிப்பு சில மாற்றங்கள் பெற்றுள்ளது. முதற்பதிப்பு வெளிவந்த உடனேயே தீர்ந்து விட்டது. மறுபதிப்பு வெளியிட இந்நூல் எங்குங் கிடைக்கவில்ல்ை. கவிஞரிடத்திலேயே இந்நூலின் ஒரு படி கூட இல்லாமல், நீண்ட நெடு முயற்சிக்குப் பிறகு, கவிஞரின் நண்பர் ஒரு வரிடத்திலிருந்து க்ண்டுபிடிக்க்ப்ப்ட்டது. த ற் பொழுது முடியரசன் பதிப்பகத்தின் முதல் வெளியீடர்க எமது கன்னி முயற்சியால் உங்கள் கரங்களில் திகழ்கிறது. இந்நூலைப் படிக்குங்கால், புரட்சிக் கவிஞரின் மறு மலர்ச்சியாக முடியரசன் திகழ்கிறார் என்பதை உணரலாம். இக் கவிதைகளைப் படிப்போர், தாய்மொழிப் பற்றும் தன்மான இனப்பற்றும் த மி ழ் ப் பண்பாட்டுணர்ச்சியும் பெற்று, எழுச்சி பெறுவர் என்பது உறுதி. திராவிட எதிர்ப்பு மிகுந்திருந்த அக்காலத்திலேயே, எந்தக் கவியரங்கிலும், திராவிடக் கொள்கைகளை நயமாகத் தமது கவிதைகளில் துணிந்து பாடி வளர்த்திருக்கிறார் கவிஞர் என்பதை இந் நூலை ஊன்றிப் படிப்பார் அறிவர். கவியரசர் முடியரசனாரின் பிறநூல்கள் அனைத்தையும் அடுத்தடுத்து வெளியிட்டு, தமிழ்நாட்டில் தாய்த் தமிழ்ப் பற்று, தன்மான இனப்பற்று ஆகிய கொள்கைகளைப் பரப்பி நேர்ழையான சமநிலை சமத்துவத் தமிழ்ச் சமுதாயத்தை வளர்த்தெடுக்க ஒரு தமிழ்ப் பண்பாட்டுத்தளம் அமைப்பதற் கான முதல் முயற்சியே எமது முடியரசன் பதிப்பகம். எங்கள் நோக்கம் செழிப்புற்று வளரக் களத்தில் இறங்கி யுள்ளோம். வெற்றி தமிழ் மக்களாகிய உங்கள் கரங்களில் தான் உள்ளது. தி. பி. 2026, சுறவம் 3 17–1–1995 பூங்கோதை பாரி