பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

பணத்தைத் தவிர வேறு எதைத்தான் முதலாளிகள் விளைவிக்கிருர்கள்? நம்பிக்கை வறட்சியும் இருள் நோக்கும் கொண்ட மனுேபாவம் (பெஸிமிலம்), பொருமை, பேராசை, வெறுப்பு ஆகியவற்றைத்தான். இவை முடிவில் அவர்களே கிச்சயமாக அழித்தே தீரும். ஆனால், அவை வெடிக்கும் பொழுது அவர்களோடு சேர்த்து, கலாசாரப் பொக்கிஷங்களின் பெருங் தொகுதியையும் அழித்து விடக் கூடும். நோய் முற்றி வீங்கிக் கிடக்கும் உங்கள் நாகரிகம் அளவிலாத துன்பத்தை உங்களுக்குத் தரப்போவது உறுதி.

அரசியல் அதிகாரம் மற்றவர்கள் உழைப்பு மீது வாழும் புல்லுருவிகளிடம் இல்லாமல்- தொழிலாளி மக் களின் முழு உரிமையாக இருக்கிற இடத்தில் தான் உண் மையான நாகரிகமும், தீவிரமான கலாசார முன்னேற்ற மும் சாத்தியம் என்பது என் கருத்து. சங்தேகம் இல்லாமல், இது என் சொந்த அபிப்பிராயமே. முதலாளிகள் சமூக ரீதியில் ஆபத்தான மனிதர்களின் கும்பல் என்று பிர கடனப்படுத்த வேண்டும்; அவர்களுடைய சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட வேண்டும்; கடுக் கடலில் எங்காவது உள்ள தீவில் அவர்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்; அங்கே அவர்கள் அமைதியோடு சாவ தற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று நான் சிபாரிசு செய்கிறேன். ஒரு சமூகப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஏற்ற இரக்கமுள்ள வழி இதுதான். அமெரிக்க லட்சிய வாதம்' என்கிற உணர்வுக்கு முற்றிலும் பொருத்தமான தும் கூட. நாடகங்கள், சோகக் கதைகள்-ஆகியவையே ஒரு காட்டு மக்களின் வரலாறு என்றழைக்கப்படுகின்றன. அவற்றில் மூழ்கித் திளேக்காது, எல்லாம் நன்மைக்கே என்று கருதும் மக்களின் அப்பாவி மனப்பான்மையே அமெரிக்க லட்சிய வாதம் ஆகும். (1937–29)