உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கார்ல் மார்க்சின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

1. சூரியன் ஒளி மறைவு - சந்திரன் ஒளி இரங்கல்!

மயானத்தில் எங்கல்ஸ் கண்ணீர் உரை

1883-ம் ஆண்டு, மார்க் மாதம் 14-ம் நாள் பிற்பகல் இரண்டே முக்கால் மணி!

உலகத்தின் மிகப்பெரிய சிந்தனையாளர்களுள் ஒருவரான கார்ல் மார்க்ஸ் என்ற சிந்தனைச் சூரியன், தனது சிந்தனை எனும் சூரிய ஒளியைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டு இங்கிலாந்து நாட்டின் கீழ்வானிலே மறைந்து விட்டது.

'சமதர்மம்' என்ற தத்துவ வானிலே 'பொதுவுடைமை' எனும் பூலோக மோட்சத்தைத் தொழிலாளர் ஒவ்வொரு வரும் பெற்றி, அத்தத்துவத்தின் சோசலிச் சமுதாயம் மெல்ல மெல்ல வளர்ந்து, மக்கள் அனைவரும் சம அறிவும், திறனும், உழைப்பும், நிலைபெற்ற ஒரு சமுதாய நிலைமை யைக் கடித் துடிதுட்டிப்போடு தகத்தகப்பாக ஒளிபரப்பப் பணியாற்றிய கார்ல் மார்க்ஸ் என்ற சூரியன் இன்று மறைவு பெற்ற துயர நாள்!

சோசலிசம் - என்றால் என்ன?

'சோசலிசச் சமுதாயம் என்றால் என்ன? என்ற வினாவை உலக மக்கள் இடையே எழுப்பியவர் மார்க்ஸ் அவரது கட்டுரைகளின் ஒவ்வொரு எழுத்திலும்