உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலத்தின் குரல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7


1939 முதல் தீவிரமாக எழுதத் தொடங்கினேன். அப்போதுதான் பத்திரிகைகளுக்கும் என் எழுத்துக்களை அனுப்ப ஆரம்பித்தேன்.


சிவசு:
நீங்கள் முதன் முதலில் எழுதி எதில் வெளிவத்தது? அது பற்றி என்ன உணர்ந்தீர்கள்?


வ.க:
எனது முதல் கதை சந்திரகாந்தக்கல் பிரசண்ட விகடன்’ இதழில் (ஆசிரியர்: நாரணதுரைக்கண்ணன்) வெளியாயிற்று. அதீதமான கற்பனை கதை,

சந்திரகாந்தக் கல்லுக்கு (Moon Stone) ஒரு இயல்பு உண்டு. பவுர்ணமி இரவில் அதில் நீர் கசியும் என்ற பழங்கால நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட ஒரு கதை. அதை அனுப்பி ஏழு எட்டு மாதங்களுக்குப் பிறகு அது வெளிவராது என்று எண்ணியிருந்த வேளையில்-வந்தது. அதனுல் அது அவ்வளவாக உளக்கிளர்ச்சி ஏற்படுத்தி விடவில்லை.

ஆனுல் 1939 லேயே ஆனந்த விகடனில் 'புன்னகையும் புது நிலவும்' என்ற கதை பிரசுரமாகி அதுக்கு 13 ரூபாய் எட்டணுவுக்கு ஒரு செக் வந்தபோது ஏற்பட்ட உளச் சிலிர்ப்பு விசேஷமானது தான். அச்சில் வந்த கதையை பல தடவைகள் படித்து மகிழ்ந்தேன் அதே மாதிரி 'கலைமகள்’ இதழுக்கு அனுப்பிய லட்சிய சிதைவு என்ற கதை மறு மாதமே பிரசுரமாகி வால்போஸ்டரிலும் கதையின் பெயரும் என் பெய ரும் அச்சாகி வந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அதிகம்தான். 1941-ல் நிகழ்ந்தது.

சிவசு:
வேலையில் சேர்ந்ததிலிருந்து வாழ்க்கை வரலாறு எப்படி?