உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலத்தின் குரல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
21


சந்தித்துப் பேசியிருக்கிறேன். தெருங்கிய தொடர்பு இருந்ததில்லை.

கு ப. ராஜகோபாலை இரண்டே தடவைகள்தான் சந்தித்திருக்கிறேன். ந.பிச்சமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட வாய்ப்பு இருந்தது.

வ ரா. எனக்கு உற்சாகமூட்டிய பெரியார் பல தடவைகள் சந்தித்தது உண்டு கவிஞர் ச. து சு. யோகியார் என்னிடம் பிரியம் கொண்ட நண்பரானார். கவி பாரதிதாசனை இரண்டு மூன்று தடவைகள் சந்தித்தது உண்டு.

அநேகமாக எல்லாப் பிரபல எழுத்தாளர்களையும் ஒன் நிரு முறைகள் கண்டு பேசியிருக்கிறேன். மௌனியை இதுவரை ஒரு தடவை கூடப் பார்த்தது கிடையாது. சமகால எழுத்தாளர்கள் என்று சொல்லப் போனால், ரகுநாதன் திருநெல்வேலியிலிருந்து எழுதிக் கொண் டிருந்தார். அவருடன் பழகியது உண்டு. தி க. சிவசங்கரன், எழுத வேண்டும் என்று ஆர்வம் கொண்டு, முயன்று வந்தார். என் நண்பரானார். கு. அழகிரிசாமி, சப்ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் குமாஸ்தா வேலையை துறந்துவிட்டு, பத்திரிகை உலகில் புகுந் திருந்தார். பிரசண்ட விகடன்', அலுவலகத்தில் எனக்கு அறிமுகமானார்., - அகிலன் அறிமுகம் புதுக்கோட்டையில் கிடைத்தது, க', நா. சுப்பிரமணியம், சி சு. செல்லப்பா ஆகியோ ரது பழக்கம் நான் சுயேச்சை எழுத்தாளனாக சென்னை - சேர்ந்த பிறகே - 1947க்குப் பின் --- கிட்டியது.