சிவசு: சிவசு: 37 போடுவது; ரவுண்ட் கேரக்டர், ட்ரையாங்கிள் என் து என்னென்ன பாகுபாடுகளே எல்லாமோ புகுத்தி! என்ருலும், அங்கங்கே சில கல்லூரிகளில் தமிழ்த் துறையில் இலக்கிய ஈடுபாடும், ரசனையும், ஆர்வமும் ஆற்றலும் உடையவர்கள் எதிர்ப்படுவது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம். இவர்கள் படைப்பாளிகளாகவும் இருக் கிரு.ர்கள். ஒரு சிலச் விமர்சனத்துறையில் ஈடுபட்டு, பாராட்டத் தகுந்த முறையில் செயல்புரிந்துகொண்டி ருக்கிருர்கள். இந்த ரகத்தினர் அதிகரிக்க வேண்டும். நாடகம் தமிழில் முன்பும் இப்பொழுதும் எப்படி உள்ளது? தமிழில் நாடகம் எப்போதும் சோனிக் குழந்தையா கவே தான் காட்சி தருகிறது, சிலப்பதிகாரம் நாடகம் என்று சொல்லிப்பழம்பெருமை பேசுவதும், ஒற்றை மனுேன்மணியத்தைக் காட்டி தமிழிலும் நாடகம் வளர்ந்திருக்கிறது என்று திருப்திப் பட்டுக் கொள்வதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள் கிற காரியம்தான். உரை நடை வளர்ச்சி பெற்ற பிறகும், தமிழ் இலக்கி கியத்தில் நாடக மறுமலர்ச்சி ஏற்பட்டுவிடவில்லை. தற்காலத்தில் இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி, ஜெயந்தன் முதலியோர் சோதனை ரீதியாக ஓரளவு செய்திருக்கிருச்கள். அவ்வளவுதான். நாடகம் பற்றி உங்கள் Concept என்ன? படித்த சில நாடக ஆசிரியர்களைக் கூறி விமர்சியுங்கள்.
பக்கம்:காலத்தின் குரல்.pdf/43
Appearance