உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

9


என்பதற்கு ஆதாரமில்லாமல், அறிஞர்கள் அனைவரும் கற்பனையைத் துணைக்கு அழைக்க இயலாமல், பரமனைக் காண விழையும் பக்தர் குழாம் காட்டுகின்ற உருவக் கோலத்தைப் போல, பல திறம்பட்ட கூற்றுக்களைக் கூறிச் செல்கின்றனர்.

கிரேக்கமும் ரோமும்

ஸ்பார்ட்டா எனும் நாட்டை ஆண்டவர்கள் தங்கள் நாட்டின் போர் வீரர்களுக்கு, உடலில் வலிவும் பொலிவும் ஏற்பட, கால்பந்தாட்டம் போன்றதோர் விளையாட்டில் அவர்களை ஈடுபடுத்தினர், பாடு படுத்தினர், பலன் கண்டனர் என்றும்; அவர்கள் வீரமுடன் வெளிநாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று வெற்றி கண்டு தமது ஆட்சியை நிறுவிய பொழுது, அவர்கள் கலாச்சாரத்தோடு கிரேக்க தேசம் முழுவதும் கீர்த்தியுடன் இந்த ஆட்டம் பரவியது என்றும்; கிரேக்கமானது ரோமானியர்களின் கையிலே சிக்கித் தவித்தபோது, இந்த ஆட்டம் ரோம் நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது என்றும் ஓர் வரலாற்றுக் குறிப்பு உரைக்கின்றது.

தற்போது ஆடுகின்ற கால்பந்தாட்டத்தை, போன்றதோர் வடிவங்கொண்ட ஒரு ஆட்டம் ரோம் நாட்டிலே ஆடப்பெற்றது என்பதற்கு கி.மு.2ஆம் நூற்றாண்டின் ஜூலியஸ் போலக்ஸ் என்பாரின் இலக்கிய நூல்களைச் சிலர் சான்று காட்டுவார்கள்.

கொடுமை வாய்ந்த காட்டுமிராண்டிப் பகைவர் களால் ரோம் நகரம் அழிந்தபோது ஏற்பட்டக் கலவரத்திலும் குழப்பங்களிலும், ஆட்டமும் ஆட்டங் கண்டு மறைந்து போயிற்று என்றும், அக்காலமே