பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
கால் பந்தாட்டம்
 

விளையாட்டுகளுக்கு இருண்ட காலமாக விளங்கியது என்பார்கள் சரித்திர வல்லுநர்கள்.

‘கர்பாசுடன்’ (Harpaston) என்ற பெயரிலே கால்பந்தாட்டம் போன்ற ஆட்டத்தைக் கிரேக்கர்கள் ஆடி வந்தது போலவே, ‘கால்சியோ’ (Calcio) என்ற பெயரில் இத்தாலியர்களும் ஆடி வந்ததாக ஒரு வரலாற்றுக் குறிப்பு விரித்துரைக்கின்றது.

மேற்கூறிய குறிப்புகளுக்கு ஆதாரம் காட்டப் பலர் முன் வந்தாலும், கிரேக்கத்தில் கீர்த்தியுடன் விளங்கிய ஒலிம்பிக் பந்தயங்களில், கால்பந்தாட்டம் ஏன் இடம் பெறவில்லை? அவர்களின் வரலாற்றுக் குறிப்பிலே ஏன் வடிவம் கொள்ளவில்லை என்ற காரணம் கேட்டு, ஏற்றுக் கொள்ள மறுப்போரும் உண்டு.

சைனாவின் உரிமைக் கொடி

இது மிகப் பழமையான விளையாட்டு என்பதால், இந்த ஆட்டம் சீனத்தில் தான் முதலில் விளையாடப் பெற்றது என்பதற்கு சீனக்கவிஞரின் பாடல்களை ஒருவர் சான்று காட்டுவார். கி.மு.5ஆம் நூற்றாண்டில் ஆடப்பட்ட சீன விளையாட்டில் இடம் பெற்ற பந்தானது, வெட்டப்பட்ட எட்டுத்தோல் துண்டுகளால் இணைக்கப்பட்டு, அதனுள் மயிரைத் திணித்து, சீனப் பழங்குடி மக்களால் ஆடப்பெற்று வந்திருக்கிறது என, பேராசிரியர் ‘ஜில்ஸ்’ என்பார் எடுத்துரைப்பார்.

எப்படித் தோன்றியது சைனாவில்? இது எப்பொழுது மறைந்தது? ஏன் பழங்கால மக்களைப் போல இக்கால மக்கள் இந்த ஆட்டத்தில் உற்சாகமாக ஈடுபடவில்லை? என்பதற்குரிய வினாக்களுக்கு