டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
15
இவ்வாறு வளர்ந்த பாரதக் குழுவினர், 1962 ஆம் ஆண்டில் நடந்த ஆசியப் போட்டியிலே வெற்றி திருநாடாக்கினர் நமது தாயகத்தை. பிறகு, பலகாலும் தொடர்ந்து தோற்றும், சில நேரங்களில் வெற்றி பெற்று வந்தாலும், இன்னும் நாம், ஒலிம்பிக் பந்தயத்தில் வெல்லுகின்ற அளவுக்கு வீரியமோ, விரைந்து பணியாற்றும் காரியமோ செய்தோமில்லை.
55 கோடி மக்கள் வாழ்கின்ற பரந்த துணைக் கண்டத்தில், ஆற்றல் மிக்க பதினொரு பேரை நாம் கண்டுபிடிக்க வேண்டும். கால் பந்தாட்டத்தில் கெட்டிக்காரராக விளங்கச் செய்ய வேண்டும். அகில உலகத்தின் கால் பந்தாட்டத்தில் நமது தாயகக் கொடி முன்னணியில் பறக்க வேண்டும்.
இதுவே எல்லோரின் கனவும் நினைவும், நமக்குத் தேவையோ, முனைப்பும் உழைப்பும். இளைஞர்களைத் துண்டுவோம் அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவோம். அவர்கள் கொண்டு வரும் வெற்றிச் செய்திக்காக, இன்றிலிருந்து எல்லோரும் விளையாட்டுக்களில் ஒரு வீர சபதத்தை மேற்கொள்ளுவோம்.
'வெற்றி பெறுவோம், வீறு கொள்ளுவோம்’ என்ற நமது சபதம் நிறைவேற வேண்டுமானால், கால் பந்தாட்டத்திற்குரிய திறன் நுணுக்கங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமல்லவா! 'தாய்மொழி மூலம் பெறும் கல்வியில் தான் நெஞ்சம் தழைக்கும்’ என்ற நமது அரசின் அடிச்சுவட்டை ஒட்டி, எல்லாம் தமிழில் என்று எழுதித் தந்திருக்கிறோம்.
படிக்க வேண்டும். பெரும் பயன் தரும் கருத்துக் களைப் பலமுறை நினைக்க வேண்டும். நினைத்து