உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கால் பந்தாட்டம்


'முனை உதை'யை உதைத்தாடியவரே, மற்றவர் யாரேனும் பந்தை எடுத்து விளையாடுவதற்கு முன், தானே மீண்டும் இரண்டாம் முறையாக ஆடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அவ்வாறு இரண்டாம் முறையாக தொடர்ந்து ஆடி தவறு செய்தால், தவறு செய்த குழுவினருக்கு எதிர்க்குழுவினர், மறைமுகத் 'தனி உதை' வாய்ப்புக் கிடைக்கப் பெற்று உதைத்தாடி பந்தை ஆட்டத்தில் இட, ஆட்டம் தொடரும்.

8. தனி உதை (Free-Kick)

தவறு செய்த குழுவினருக்குத் தண்டனையாக அவர்களின் பகுதியை நோக்கி எதிர்க்குழுவினர் தவறு நிகழ்ந்த இடத்தில் வைத்துப் பந்தை உதைக்கும் வாய்ப்பு அதாவது பந்தை நிலையாக வைத்து, எந்தவிதத் தடையையும் தவறு செய்த குழு இழைக்காமல், 10 கெஜ தூரத்திற்கு அப்பால் நின்று கொண்டிருக்க, எதிர்க் குழுவினர் பந்தை உதைத்து ஆட்டத்தைத் தொடங்குவதற்குத் 'தனி உதை' என்று கூறப்படுகிறது.

இவ்வாறு தண்டனையை வாங்கித் தருகின்ற வாய்ப்பினை அளிக்கும் 'தவறுகள்' (Fouls) என்னென்ன என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். (தெரியாமல் செய்கின்ற விதிமீறலைத் 'தவறு' என்றும், தெரிந்தே வேண்டுமென்றே செய்கின்ற விதிமீறலைக் குற்றம் என்றும் பெரியோர்கள் கூறுவார்கள்).

செய்கின்ற தவறுகளையும், குற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டு தருகின்ற தண்டனையான