11
னைப் பெற்றுக் கொண்டு ஆடலாம். ஆட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் பொழுது 75 லிருந்து 85 'பந்தெறிந்தவணை'க்குள்ளாக (Over) புதியதாக ஒரு பந்தினை மாற்றிக் கொண்டு ஆடவும் அனுமதியுண்டு. (ஒரு பந்தெறி தவணைக்கு 8 எறிகள் என்றிருந்தால், அப்பொழுது 55 லிருந்து 65க்குள்ளாக மாற்றிக் கொள்ளலாம் என்று கிரிக்கெட் ஆட்டத்தைக் கட்டுப்படுத்திக் கண்காணிக்கும் நிர்வாகக் குழுவானது, அந்தந்த நாட்டின் நிலைக்கேற்ப நிர்ணயித்து வைத்திருக்கிறது).
5. அப்படியென்றால், ஒரு பந்தெறி தவனைக்கு {Over) எத்தனை எறிகள் (bowl) உண்டு ?
பொதுவாக, ஒரு பந்தெறி தவணைக்கு 6 எறிகள் தான் உண்டு . சில இடங்களில்தான் 8 எறிகள் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
6. பந்து காணாமற்போனது என்றால், அதற்காக எப்படி ஒரு புதிய பந்தினைப் பெற்று ஆட முடியும்?
புதிய பந்தினை அப்படியே மாற்றிக் கொண்டு ஆடமுடியாது. ஆனால், காணாமற்போன பந்துக்குப் பதிலாக புதிதாக வரும் பந்தானது, பழைய பந்தைப்போலவே தேய்ந்த நிலையில் (Wear or use) இருப்பதுபோல் மாற்றிய பிறகே, ஆடமுடியும்.
7. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அல்லாத போட்டிகளில் (Matches) புதிய பந்து பெறுவதற்கு அதே விதிமுறை (75 முதல் 85 பந்தெறிதவணை) பொருந்துமா?
நிச்சயம் பொருந்தாது. நாணயம் சுண்டியெறிந்து போட்டி ஆட்டத்தைத் தொடங்குவ-