உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13


மூன்று குறிக்கம்புகள் பக்கம் பக்கமாகவே ஊன்றப் பட்டிருந்தாலும், அவற்றின் இடைப்பகுதியில் பந்து உள்ளே புகுந்து போகாத அளவு தான் இடைவெளி இருக்கும். அந்த மூன்று கம்புகளின், மேல் மட்ட உயரமானது தரையிலிருந்து அளந்து பார்த்தால், 28 அங்குல உயரம் இருப்பது போல அமைந்திருக்க வேண்டும்.

அந்த மூன்று கம்புகளையும் 2 இணைப்பான்கள் (Bails) தலைப் பாகத்தில் இணைத்துக் கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு இணைப்பானும் 4, அங்குல நீளம் உள்ளது. அது, குறிக் கம்புகளின் மேல் வைக்கப்படும்பொழுது, கம்புக்கு மேல் அரை அங்குல உயரத்திற்கு மேல் துருத்திக் கொண்டு இருப்பது போலவும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்பொழுது, அமைக்கப்பட்டிருக்கும் விக்கெட்டின் உயரம் 28 அங்குலம், அகலம் 9 அங்குலம் என்ற அளவில் எப்பொழுதும் அமைக்கப்படுதல் வேண்டும். ஆக, ஒரு போட்டி ஆட்டத்திற்கு 2 விக்கெட்டுகள் உண்டு.

10. இரண்டு விக்கெட்டுக்கும் இடையேயுள்ள தூரம் எவ்வளவு?

ஊன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு விக்கெட்டுகளுக்கும் இடைப்பட்ட தூரமானது 22 கெஜமாகும்.

11. 22 கெஜ நீளத்திற்குமேல் விக்கெட்டுகள் அமைக்கப்பட்டு, ஆட்டம் தொடங்கி, இரண்டு மூன்று விக்கெட்டுகளும்