15
இந்தப் பந்தாடும் பகுதியானது, இருபுறம் உள்ள விக்கெட்டுக்கருகில் உள்ள பந்தெறி எல்லைக் கோடுகளுக்கு (Bowling crease) இடையிலே அமைக்கப் பட்டிருக்கும் ஆட்டத் தரையாகும்.
14. பந்தெறி எல்லைக் கோட்டின் (Bowling Crease) அளவு என்ன?
குறிக்கம்புகளுக்கு நேராக, அதாவது ஊன்றியுள்ள குறிக்கம்புகளுக்குரியதான நேர்க் கோட்டில் நடுக்கம்பிலிருந்து 8 அடி 8 அங்குல தூரம் (2.64 மீட்டர்) உள்ளது போல குறிக்கப்பட்டிருக்கும் கோடுதான், பந்தெறிபவர் (Bowler) ஒடி வந்து பந்தெறிகின்ற எல்லையைக் குறிக்கும் கோடாகும்.
15. அடித்தாடும் எல்லைக்கோடு (Popping Crease) என்றால் என்ன? அது எங்கே குறிக்கப்பட்டிருக்கிறது?
அடித்தாடு எல்லைக் கோடானது, பந்தாடும் மட்டையுடன் பந்தடித்தாட வந்து நிற்கும் ஒரு ஆட்டக்காரர் நிற்கக் கூடிய இட எல்லையைக் குறிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்த ஆட்டக்காரர், தனது உடலின் ஒரு பகுதியாவது அல்லது தான் கையில் பிடித்திருக்கும் மட்டையின் ஒரு பகுதியாவது அந்த எல்லைகுள்ளே இருப்பது போல் எப்பொழுதும் நின்று கொண் டி ரு க் க வேண்டும். அது அவரது பாதுகாப்புப் பகுதியாக அமைந்திருக்கும்.
அப்படியின்றி, அவர் அந்தக் கோட்டுக்கு வெளியே வந்துவிட்டால், அவர் வெளியே இருப்ப